சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சுனாமி சுவடுகள்: இணுவையூர் வ-க-பரமநாதன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

செத்துப்  போனோர் பலநூறு            சிதைந்து போன பலவூருசொத்தும் சுகமும் போயொழியத்            துன்பம் மட்டும் நிறைந்திருக்கும்கொத்துக் கொத்தாய்ப் பலவுயிகள்            கொண்டு போன சுனாமியதன்கத்து மோசைச் சுவடுமட்டும்            காதில் வந்து மோதிநிற்கே!தந்தை தாயைத் பறித்தெடுத்துத்            தரணி யிதிலே வாடவிட்டுச்சொந்த பந்த மேதுமின்றிச்            சூழும் துயரில் தான்கிடத்திவிந்தை யுலகில் நடைப்பிணமாய்            விழிபி துங்கி யலையவைத்தஅந்தச் சுனாமிச் சுவடுகளோ            அழிய வில்லை நெஞ்சினுள்ளே!தேடி வைத்த பொருளனைத்தும்            தின்று சுனாமி போனதினால்ஓடி வந்தே உதவினோரும்            உடனி ருப்போம் என்றுரைத்துநாடி வந்த நல்லரசும்            நகர்ந்து மெல்லக் கைவிடவும்கோடி யிடர்கள் சுவடுகளாய்க்            கொண்டே வாழ்ந்து சாகிறாரே!அலைக ளாடும் கடலோரம்            அனைத்தும் அழிந்து போனதுவும்விலையே யில்லா இன்னுயிர்கள்            விழுங்கி மீண்டு போனதுவும்வலையே வாழ்வாய்க் கொண்டோரை            வதைத்தே வாழ  வைத்ததுவும்நிலையாய் மறையாச் சுவடுகளாய்            நிற்க வைத்த சுனாமியாமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.