ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வெள்ளை பணியாரம்

செய்முறை: அரிசியையும், உளுந்தினையும் சுமார் 3 மணி நேரம் ஊறவிடுங்கள். அதன் பிறகு நீரை வடித்து,

News image
Updated On :11 ஆகஸ்ட் 2016, 11:11 am

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 4 கிண்ணம்

உளுத்தம் பருப்பு - 1 கிண்ணம்

பால் - கால் டம்ளர்

உப்பு - சிறிது

செய்முறை: அரிசியையும், உளுந்தினையும் சுமார் 3 மணி நேரம் ஊறவிடுங்கள். அதன் பிறகு நீரை வடித்து, இரண்டையும் சேர்த்து மாவாய் அரைத்துக் கொள்ளுங்கள். மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும். இத்துடன் பால், சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலக்கிக் கொள்ளுங்கள். சட்டியை அடுப்பில் வைத்து, கால் சட்டி அளவிற்கு எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் ஒரு கரண்டி மாவு எடுத்து பணியாரமாக ஊற்றுங்கள். பணியாரம் எண்ணெய்யில் மிதக்க ஆரம்பித்ததும் திருப்பிப் போட்டு வெள்ளையாக இருக்கும் போதே எடுத்துவிடவும். பணியாரத்தை ஒவ்வொன்றாக ஊற்றி  எடுக்கவும். இதற்கு தக்காளிச் சட்னி சுவையான இருக்கும்.

குறிப்பு: மாவு கொஞ்சம் கெட்டியாக வைத்து ஒரு பணியாரம் முதலில் ஊற்றி பார்த்துக் கொள்ளவும். தேவையெனில் பிறகு சிறிது நீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.