ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

துப்பா கோரி ரோஸ்ட்

சிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் வடித்து,  மேரினேட் செய்ய கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து பிரட்டி

News image
Updated On :5 செப்டம்பர் 2016, 6:30 pm

கர்நாடகா ஸ்பெஷல்


தேவையானவை:
எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
மேரினேட் செய்ய:
தயிர் - கால் கப்
எலுமிச்சை சாறு - அரை மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள்
வறுத்து அரைக்க:
காஷ்மீரி மிளகாய் வற்றல் - 6
மிளகு - கால் தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு சிட்டிகை
தனியா - ஒரு மேசைக்கரண்டி
லவங்கம் - 2
புளி - ஒரு சிறு துண்டு (2 இன்ச் அளவு)
பூண்டு - 5 பற்கள்
சீரகம் - கால் தேக்கரண்டி
நெய் - 3 மேசைக்கரண்டி

செய்முறை: சிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் வடித்து,  மேரினேட் செய்ய கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து பிரட்டி, 4 - 8 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும். பிறகு வெறும் கடாயில் வறுத்து அரைக்கக் கொடுத்தவற்றிலுள்ள மிளகாய் வற்றலை முதலில் வறுக்கவும்.

பிறகு அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, புளி மற்றும் பூண்டு தவிர மீதமுள்ளவற்றைச் சேர்த்து சிறு தீயில் 2 - 3 நிமிடங்கள் வறுத்தெடுக்கவும். வறுத்தவற்றுடன் பூண்டு மற்றும் புளி சேர்த்து பொடித்துக் கொண்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு நைசாக கெட்டியாக அரைத்து வைக்கவும். (அரைக்கும் போது அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது). பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி நெய் விட்டு, அதில் ஊறிய சிக்கன் துண்டுகளைச் சேர்த்துப் பிரட்டி மூடி போட்டு வேகவிட்டு எடுக்கவும். (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

சிக்கனிலிருந்து வரும் தண்ணீரே போதுமானது. வெந்ததும் அதிலிருக்கும் நீருடன் சேர்த்து எடுத்து வைக்கவும்). அதே பாத்திரத்தில் மீதமுள்ள நெய்யை விட்டு, அரைத்த மிளகாய் மசாலா மற்றும் உப்புச் சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து நெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். நெய் பிரிந்து, மசாலா திரண்டு வரும் போது, சிக்கனை அதிலுள்ள நீருடன் சேர்க்கவும். (உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்). மசாலா முழுவதும் கெட்டியாகி சிக்கனுடன் சேர்ந்து வரும் வரை மிதமான தீயில் வைத்து பிரட்டவும். (மசாலாவுடன் சிக்கன் சேர்ந்து ஊறினால் சுவை நன்றாக இருக்கும்). மசாலா சிக்கனுடன் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.

சூடான கர்நாடகா ஸ்பெஷல் சிக்கன் கீ ரோஸ்ட் தயார். இது பருப்பு சாதம், ரசம் சாதம், நீர் தோசா, ரொட்டி மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


குறிப்பு:  இதில் கலருக்காக காஷ்மீரி மிளகாயும் (3), காரத்திற்கு வேறு மிளகாயுமாக(2) சேர்க்கலாம். மேரினேட் செய்த சிக்கனை நெய் அல்லது எண்ணெயில் பொரித்து எடுத்தும் மசாலாவில் சேர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.