ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

காலிஃப்ளவர் நகெட்ஸ்

செய்முறை: காலிஃப்ளவரை சிறுசிறு பூக்களாகப் பிரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு நீர் ஊற்றி,

News image
Updated On :29 ஜூலை 2016, 7:40 am

தேவையானப் பொருள்கள்:

சிறிய இளம் காலிஃப்ளவர் -1

மைதா -2 தேக்கரண்டி

தனி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - சிறிது

முட்டை -2

ப்ரெட் தூள் -2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை சிறுசிறு பூக்களாகப் பிரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு நீர் ஊற்றி, சிறிது  உப்பு சேர்த்து அடுப்பிலேற்றி ஒரு கொதி வந்ததும் நீரை வடித்துவிட்டு வைக்கவும். பின்னர், மைதா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். மற்றொரு கிண்ணத்தில் ப்ரெட் தூளை எடுத்துக்கொள்ளவும். முட்டையைத் தனியாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடித்து வைத்துக் கொள்ளவும். வெந்த காலிஃப்ளவரை மைதா கலவையில் கொட்டி, நன்கு புரட்டி வைக்கவும். அடுத்து ஒவ்வொரு பூவாக எடுத்து முட்டையில் முழுவதும் தோய்த்து, உடனே ப்ரெட் தூளில் புரட்டி ஒரு தட்டில் வைக்கவும். இதுபோன்று எல்லா பூக்களையும் செய்து வைக்கவும். பின்னர், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஒவ்வொன்றாகவோ அல்லது எண்ணெய் கொண்ட மட்டுமோ போட்டு  பொரித்து எடுக்கவும்.

இப்போது சுவையான,மொறுமொறுப்பான காலிஃப்ளவர் நகெட்ஸ் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.