போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!நீதிமன்றக் காவலில் இருந்த சிஜேபி தலைவர்கள் அசுதோஷ், சௌரவ் விடுதலை!மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு! தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்!அக். 23 முதல் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே குளிர்சாதன மின்சார ரயில்!வாடிக்கையாளர்களின் வங்கி இருப்புத்தொகை பாதுகாப்பாக உள்ளது: எஸ்பிஐ விளக்கம்வங்கி, நிதிப் பங்குகள் சரிவு எதிரொலி: வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!6 வார உச்சத்தில் இந்திய ரூபாய்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிலைபெற்றது.

இந்திய ரூபாய்

Updated On :

மும்பை: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், உலகளாவிய சூழல் மேம்பட்டதால் கச்சா எண்ணெய் விலை சரிந்தன. இதன் விளைவாக, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிலைபெற்றது.

அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை குறித்த நம்பிக்கையால் கச்சா எண்ணெய் விலை சரிந்ததால், இந்திய ரூபாய் வலுவடைந்ததும், உள்நாட்டுச் சந்தையின் சாதகமான போக்கு மற்றும் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் குறைந்ததும் இந்திய ரூபாயின் மதிப்பை உயர செய்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.86 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கி, பிறகு வலுவடைந்து வர்த்தகத்தின் இடையே ரூ. 95.72 என்ற அளவை எட்டியது. வர்த்தக முடிவில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.81 ஆக நிலைபெற்றது. இது வர்த்தகத்தின் முந்தைய நாள் வர்த்தக முடிவை விட 15 காசுகள் அதிகமாகும்.

முன்னதாக வெள்ளிக்கிழமையன்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.96 ஆக இருந்தது.

Summary

The rupee appreciated 15 paise to close at 95.81 against the US dollar on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.