ஒலி எழுப்பும் வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள்! விரைவில் அறிமுகம்!
வாட்ஸ்ஆப் செயலியில் அறிமுகமாகவுள்ள புதிய அம்சம் குறித்து...
வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர் - பிரதிப்படம்
வாட்ஸ்ஆப்பில் நாம் அனுப்பும் ஸ்டிக்கர்கள் ஒலி எழுப்பக்கூடிய வகையில் அமையும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்ஆப் பயனர்களின் தேவைகளுக்கேற்றார் போலவும் காலத்துக்கேற்றார் போலவும் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
உலகளவில் சுமார் 300 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்ஆப், குறுஞ்செய்தி, புகைப்படம், விடியோ, ஆடியோ போன்றவற்றை பரிமாறிக் கொள்வதற்கும் குரல், விடியோ அழைப்புகளின் மூலம் பேசுவதற்கும் பபயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தச் செயலியில் நாம் ஒருவருக்கு ஸ்டிக்கர் அனுப்பும்போது, அவற்றை புகைப்படமாகவும் அசையும் படம் வடிவிலும் அனுப்ப முடிகிறது. தற்போது அந்த ஸ்டிக்கர்களை ஒலி எழுப்பக்கூடிய வகையில் அனுப்பும் வசதியை மெட்டா நிறுவனம் சோதித்து வருகிறது.
அதன்படி, ஒரு புகைப்படத்தை ஸ்டிக்கராக மாற்றும்போது, அதில் உள்ள சவுண்ட்வேவ்-ஐ கிளிக் செய்து நமது சொந்த குரலையோ அல்லது மொபைலில் உள்ள ஆடியோவையோ இணைத்து பயனர்களால் புதிதாக ஸ்டிக்கர்களை உருவாக்க முடியும். இந்த ஆடியோவின் அளவு 10 விநாடிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் அனுப்பிய ஸ்டிக்கரை சாட்டில் (Chat) தொடுவதன் மூலம் அந்த ஒலியை கேட்க முடியும். மேலும், அந்த ஸ்டிக்கர்கள் மீது ஸ்பீக்கர் சின்னமும் இடம்பெறும். இந்த அம்சம் விரைவில் செயலியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
The Meta is about to introduce a new feature that will allow the stickers we send on WhatsApp to make sounds.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

