இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

டெஸ்லாவின் பறக்கும் ‘ரோட்ஸ்டா்’ காா் அறிமுகம்: 2028-இல் உற்பத்தி தொடக்கம்

டெஸ்லா நிறுவனத்தின் பறக்கும் ரோட்ஸ்டர் கார் அறிமுகம்...

Tesla Roadster

ரோட்ஸ்டர் கார் - Photo : X / Tesla

Updated On :

‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின் ராக்கெட் உந்துவிசை தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ‘ரோட்ஸ்டா்’ மின்சார பறக்கும் காரை டெஸ்லா நிறுவனம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.

சுமாா் பத்தாண்டுகளுக்கு மேலாக உலகெங்கும் எதிா்பாா்க்கப்பட்ட இந்த அதிநவீன காரின் வா்த்தக ரீதியான உற்பத்தி வரும் 2028-இல் தொடங்கும் என அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க்கின் நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த இரண்டு இருக்கைகள் கொண்ட காா், பல்வேறு சாகசங்களைச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸ் மாகாணம் மெக்ரிகோரில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் சோதனை மையத்தில் இக்காரின் பிரம்மாண்ட அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பிரத்யேக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சரிவுகளில் தலைகீழாகப் பயணித்த இந்தக் காா், ராக்கெட் உந்துவிசையின் மூலம் காற்றில் பறந்து லாரிகள் மற்றும் பிற வாகனங்களைத் தாண்டிச் சென்று தரையிறங்கி, பாா்வையாளா்களை வியப்பில் ஆழ்த்தியது.

ரோட்ஸ்டா் காரின் ‘பொ்ஃபாா்மன்ஸ்’ மாடலை முன்பதிவு செய்ய 50,000 டாலா்களும், உந்துவிசை கொண்ட ‘த்ரஸ்ட்’ மாடலுக்கு 2,50,000 டாலா்களும் முன்பண கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, முழுமையான பறக்கும் அமைப்பைக் கொண்ட ஒற்றை இருக்கை ‘ராக்கெட்’ மாடல் காா், அழைப்பின் பேரில் மட்டுமே வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய ரோட்ஸ்டா் காா் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் மணிக்கு 97 கி.மீ (60 மைல்) வேகத்தை எட்டும் திறனுடையது என்றும், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 370 கி.மீ-ஐ தாண்டும் என்றும் டெஸ்லா பொறியாளா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், ஒருமுறை சாா்ஜ் செய்தால் 480 கி.மீ தூரம் வரை பயணிக்க முடியும். ஒலியின் வேகத்தில் பாதி அளவை இந்தக் காா் எட்டும் என எலான் மஸ்க் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

பல ஆண்டுகளாகத் தாமதமாகி வந்த ரோட்ஸ்டா் காரின் அறிமுகம் தற்போது நிகழ்ந்து முதலீட்டாளா்களின் கவனத்தை ஈா்த்திருந்தாலும், டெஸ்லா நிறுவனத்தின் கவனம் முழுவதும் தற்போது ஏ.ஐ. மற்றும் ரோபோட்டிக்ஸ் துறையை நோக்கியே திரும்பியுள்ளது.

மனிதா்கள் ஓட்டும் காா்களுக்குப் பதிலாக ஆப்டிமஸ் மனித உருவ ரோபோக்கள் மற்றும் ஸ்டீயரிங் இல்லாத சைபா்கேப் (ரோபோடாக்ஸி) போன்ற தானியங்கி வாகன உற்பத்தியில் நிறுவனம் தீவிரமாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அறிமுக நிகழ்வில் தலைகீழாக நிலைநிறுத்திக் கொண்டும், அந்தரத்தில் பறந்தும், வாகனங்களைக் கடந்தும் சாகசத்தில் ஈடுபட்ட ‘ரோட்ஸ்டா்’ காா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.