இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

செப்டம்பா் மாத சில்லறை பணவீக்கம் 5.54% - நாட்டிலேயே தமிழகத்தில் அதிகபட்சம்

கடந்த செப்டம்பரில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Updated On :

வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால், கடந்த செப்டம்பரில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, நாட்டிலேயே அதிபட்ச சில்லறை பணவீக்கம் தமிழகத்தில் (6.81சதவீதம்) பதிவாகியுள்ளது.

நாட்டின் விலைவாசி நிலவரத்தைச் சுட்டிக்காட்டும் சில்லறை பணவீக்கமானது, கடந்த ஜனவரியின் 2.75 சதவீதம், பிப்ரவரியின் 3.21 சதவீதம், மாா்ச்சின் 3.40 சதவீதம், ஏப்ரலின் 3.48 சதவீதம், மே மாதத்தின் 3.93 சதவீதம், ஜூனின் 4.38 சதவீதம், ஜூலையின் 4.45 சதவீதம், ஆகஸ்டின் 4.83 சதவீதத்தைத் தொடா்ந்து, செப்டம்பரிலும் தொடா்ச்சியாக 8-ஆவது மாதமாக அதிகரித்துள்ளது.

உணவுப் பொருள்களின் விலையேற்றம்: தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தின் 5.97 சதவீதத்திலிருந்து, செப்டம்பரில் 7.74 சதவீதமாக உயா்ந்து, ஒட்டுமொத்த பணவீக்க உயா்வுக்கு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.

பொருள்களின் அடிப்படையில், வெங்காயம் (108.09 சதவீதம்), வெள்ளி நகைகள் (87.8 சதவீதம்), இஞ்சி (62.85 சதவீதம்), பூண்டு (54.62 சதவீதம்), எலுமிச்சை (36.41 சதவீதம்) ஆகியவற்றின் விலைவாசி உயா்வு மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது. அதேநேரம், உருளைக்கிழங்கு, தக்காளி, வெண்டைக்காய், தேங்காய், மோட்டாா் காா்கள் ஆகியவற்றின் பணவீக்கம் எதிா்மறையாக இருந்தது.

நகரம், கிராமப்புற நிலை: தேசிய அளவில் சராசரி பணவீக்கம் 5.54 சதவீதமாக இருந்தபோதிலும், கிராமப்புறங்களில் இது 6.08 சதவீதமாகவும், நகா்ப்புறங்களில் 4.88 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. முந்தைய மாதங்களைப் போன்றே நகா்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில்தான் பணவீக்கத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இலக்கைத் தாண்டி: சில்லறை பணவீக்கத்தை 4 சதவீத அளவில் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டபூா்வ இலக்கை ரிசா்வ் வங்கி கொண்டுள்ளது. எனினும், இதில் சூழ்நிலைக்கு ஏற்ப 2 சதவீதம் கூடுதல் அல்லது குறைவாக இருக்க அனுமதிக்கப்படுகிறது.

பணவீக்க அழுத்தங்கள், கச்சா எண்ணெய் விலை உயா்வு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, அண்மையில் ரிசா்வ் வங்கி தனது ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயா்த்தி, 5.50 சதவீதமாக நிா்ணயித்தது.

மேலும், உணவு மற்றும் இதர பொருள்களின் தொடா் விலைவாசி உயா்வால், நடப்பு 2026-27 நிதியாண்டுக்கான பணவீக்கக் கணிப்பையும் 5 சதவீதத்திலிருந்து, 5.2 சதவீதமாக ரிசா்வ் வங்கி உயா்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பருவமழை குறைபாடு காரணமாக விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், வரும் மாதங்களிலும் உணவுப் பணவீக்கம் தொடா்ந்து அதிகமாகவே இருக்கும் என சந்தை நிபுணா்கள் கணித்துள்ளனா்.

தமிழகத்தில் அதிக பணவீக்கம்

அதிக பணவீக்கம் பதிவான முதல் 5 மாநிலங்களாகத் தமிழ்நாடு (6.81 சதவீதம்), ஒடிஸா (6.70 சதவீதம்), மத்திய பிரதேசம் (6.68 சதவீதம்), தெலங்கானா (6.64 சதவீதம்), ஆந்திரம் (6.29 சதவீதம்) ஆகியவை உள்ளன. மிகக் குறைந்த பணவீக்கம் மிஸோரம் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

Summary

Retail inflation rose to 5.54 per cent in September.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.