மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 73,461 கோடி டாலராக சரிவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த அக்டோபர் 2 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 73,461 கோடி டாலராக சரிந்துள்ளது.

கோப்புப் படம்

Updated On :

மும்பை: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த அக்டோபர் 2 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 73,461 கோடி டாலராக சரிந்துள்ளது.

இதற்கு முந்தைய வாரமான செப்டம்பர் 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், மொத்த கையிருப்பு 1,834 கோடி டாலர் குறைந்து 74,756 கோடி டாலராக இருந்தது.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட வைப்புத்தொகைகளுக்கான சிறப்புச் சலுகை கொண்ட 'ஸ்வாப்' திட்டத்தின் மூலம் வங்கிகள் சுமார் 13,300 கோடி டாலர் என்ற சாதனை அளவிலான நிதியைத் திரட்டியிருந்தன. இதன் விளைவாக, செப்டம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 78,571 கோடி டாலர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தை எட்டியிருந்தது.

அக்டோபர் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணயச் சொத்துக்களின் மதிப்பு 1,066 கோடி டாலர் குறைந்து 60,475 கோடி டாலராகக் குறைந்துள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன.

மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு மதிப்பு 229 கோடி டாலர் குறைந்து 10,641 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 479 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Summary

India's forex reserves dropped by USD 734.606 billion during the week ended October 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.