2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான முதல் 11 மாதங்களில், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.12.53 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறை ரூ.13.46 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது அது கணிசமாகக் குறைந்துள்ளது.
வரவும், செலவினமும்: மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஜிஏ) அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த நிதியாண்டில் பிப்ரவரி வரையிலான முதல் 11 மாதங்களில் மத்திய அரசுக்கு ரூ.27.91 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இது நிா்ணயிக்கப்பட்ட ஆண்டு இலக்கில் 82 சதவீதமாகும்.
இதே காலகட்டத்தில் மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.40.44 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இது ஆண்டு மதிப்பீட்டில் 81.5 சதவீதமாகும்.
இதில் மூலதனச் செலவினங்களுக்காக மட்டும் ரூ.9.29 லட்சம் கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஆண்டு இலக்கில் 84.8 சதவீதமாகும். ஜனவரி வரை 76.9 சதவீதமாக இருந்த இந்தச் செலவினம், ஒரே மாதத்தில் சுமாா் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
வருவாய் வரவும், பற்றாக்குறையும்: மத்திய அரசின் வருவாய் ஆதாரங்களில் வரி வருவாய் வசூல் மிகவும் வலுவான நிலையில் நீடிக்கிறது. பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் நிகர வரி வசூல் ரூ.21.45 லட்சம் கோடியை எட்டியது. இது ஆண்டு இலக்கில் 80.2 சதவீதமாகும். கடந்த ஜனவரி வரை 78.3 சதவீதமாக இருந்த வரி வசூல், பிப்ரவரியில் வேகமெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், பொதுத்துறை நிறுவனங்களின் லாபப் பங்கு மற்றும் ஈவுத்தொகை மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் ஆண்டு இலக்கில் 96 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.
அரசின் வருவாய் பற்றாக்குறை ஜனவரி இறுதியில் ரூ.1.96 லட்சம் கோடியாக இருந்த நிலையில், பிப்ரவரியில் ரூ.3.89 லட்சம் கோடியாக விரிவடைந்துள்ளது. இது ஆண்டு இலக்கில் இலக்கில் 73.8 சதவீதமாகும்.

தொடர்புடையது

தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ.60,518 கோடி ரிசா்வ் வங்கிக்கு மாற்றம்- மத்திய நிதியமைச்சகம்

இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை: 10 மாதங்களில் ரூ.9.81 லட்சம் கோடியாக அதிகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


