மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வெள்ளி கிலோ ரூ. 15,000 குறைவு! தங்கம் எவ்வளவு?

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...

News image

தங்கம் - கோப்புப்படம்

Updated On :27 மார்ச் 2026, 4:20 am

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 27) சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது.

மேற்காசிய நாடுகளுக்கிடை போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, கடந்த சில நாள்களாக தங்கத்தில் விலை அதிரடி ஏற்றமும், குறைவுமாக உள்ளது.

வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை காலை சவரனுக்கு ரூ. 5,360 குறைந்து ரூ.1,03,600-க்கும், பின்னர் பிற்பகலில் விலை மீண்டும் சவரனுக்கு ரூ. 2,240 குறைந்து ரூ.1,01,360-க்கும் விற்பனையானது.

இதன் பின்னர், ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை 15% குறைந்த நிலையில், திங்கள்கிழமை மாலையே மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்தது. ஒரு கிராம் ரூ.13,340-க்கும், சவரனுக்கு ரூ.1,06,720-க்கும் விற்பனையானது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ. 106,000, புதன்கிழமை ரூ. 108,800-க்கு விற்பனையானது. வியாழக்கிழமை காலை ரூ. 560 அதிகரித்த நிலையில், மாலை ரூ. 2,560 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,06,800-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ. 107,440 -க்கும், ஒரு கிராம் ரூ. 13,430 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 15,000 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Gold, Silver today price in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.