மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இனி செல்போனிலேயே இசையமைக்கலாம்! புதிய ஏஐ கருவியை அறிமுகம் செய்த கூகுள்!

குகுள் லைரியா 3 ப்ரோ என்ற செய்யறிவு (ஏஐ) கருவியை கூகுள் நிறுவனம் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது குறித்து...

News image

லைரியா 3 ப்ரோ - மாதிரிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 11:55 am

குகுள் லைரியா 3 ப்ரோ என்ற செய்யறிவு (ஏஐ) கருவியை கூகுள் நிறுவனம் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் இதில் பயனர்கள் தங்கள் திறனுக்கேற்ப இசையமைக்கலாம்.

செய்யறிவு கருவிகள் உதவியுடன் 3 நிமிடங்கள் வரை புதிய இசைக்கோர்வையை உருவாக்க முடியும் என கூகுள் தெரிவித்துள்ளது.

மற்றவர்களுடன் தொடர்புகொண்டு பேசுவதற்கான தேவையை முதன்மையாகக் கொண்டு செல்போன்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால், தற்போது அவற்றின் பயன்பாடு பல்வேறு வகைகளில் அதிகரித்துள்ளது.

சமீப காலமாக அறிமுகமாகிவரும் ஸ்மார்ட்போன்கள் விடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது கூகுள் நிறுவனம் ஒருபடி மேலே சென்று, இசையமைக்க ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் வகையிலாக செய்யறிவு கருவிகளை தயாரித்துள்ளது.

இசையமைக்க கடினமான செய்யறிவுக் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இசைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் அதற்கான கருவிகளை கூகுள் எளிமையாக்கியுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் டீப்மைன்ட் (Deepmind), இதற்கான செய்யறிவுக் கருவிகளை உருவாக்கியுள்ளது. மிக எளிமையாக, மெசேஜ் செய்வதைப்போல தரவுகளை உள்ளீடு செய்தாலே இசைக்கோர்வைகள் படிப்படியாக உருவாகும்.

இசையைப் புரிந்துகொள்வதற்கான வழிகாட்டுதல்களும் அடங்கியுள்ளன. இதனால், இசை மீது மேலோட்டமான ஆர்வம் இருந்தாலும், இதனைப் பயன்படுத்தி இசைத்திறனை மேம்படுத்திக்கொள்ளலாம்.

முழு நேர இசையமைப்பாளராக வேண்டும் என நினைப்பவர்களுக்கும் இசைத்துறையில் பயணிப்பவர்களுக்கும் கூகுள் லைரியா 3 ப்ரோ பயனுள்ளதாக இருக்கும் என கூகுள் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Summary

Google Lyria 3 Pro launched to create 3-minute AI music tracks in seconds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.