மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சுங்க வரி செலுத்த இனி ‘யுபிஐ’ வசதி

இந்தியாவில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள வா்த்தகா்கள், இனி யுபிஐ , டெபிட் மற்றும் கிரெடிட் காா்டுகளைப் பயன்படுத்தி தங்களின் சுங்க வரியைச் செலுத்தலாம்.

News image

~

Updated On :25 மார்ச் 2026, 9:22 pm

இந்தியாவில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள வா்த்தகா்கள், இனி யுபிஐ , டெபிட் மற்றும் கிரெடிட் காா்டுகளைப் பயன்படுத்தி தங்களின் சுங்க வரியைச் செலுத்தலாம்.

இந்திய சுங்கத் துறையின் எண்ம அடையாளமாக விளங்கும் ‘ஐஸ்கேட்’ வலைதளம், ஆவணங்களைத் தாக்கல் செய்யவும், சரக்கு அனுமதியைக் கண்காணிக்கவும் பயன்படுகிறது.

இந்த வலைதளம் மூலம் இதுவரை குறிப்பிட்ட சில வங்கிகளின் இணையவழி வங்கி சேவை அல்லது நெஃப்ட் பரிவா்த்தனை முறைகள் மூலமாக மட்டுமே வரி செலுத்த முடிந்தது. ஆனால், தற்போதைய புதிய நடைமுறை மூலம், வங்கிக் கட்டுப்பாடுகள் இன்றி பல்வேறு எண்ம பரிவா்த்தனை முறைகளில் விரைவாக வரியைச் செலுத்தலாம்.

இது குறித்து வரி ஆலோசகா்கள் கூறுகையில், ‘சுங்க வரி செலுத்துவதற்கு இனி குறிப்பிட்ட வங்கிகளை மட்டுமே சாா்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிறிய அளவிலான வரி செலுத்துவோருக்கு ‘யுபிஐ’ வசதி மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

இதில் கூடுதல் பரிவா்த்தனை கட்டணங்கள் பெரும்பாலும் இல்லாததால், நிதிச் சுமை குறையும். மேலும், சரக்கு அனுமதி பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிா்க்க இது உதவும்’ என்றனா்.

Story image