தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 அதிகம்!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5,360 அதிகரித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 1:43 pm

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று (மார்ச் 23) மாலை சவரனுக்கு ரூ. 5,360 அதிகரித்துள்ளது. இன்று காலை இரண்டு முறை தங்கம் விலை குறைந்த நிலையில், மூன்றாவது முறையாக விலை ஏற்றம் கண்டுள்ளது.

சென்னை ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 670 உயர்ந்து 13,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ. 5,360 அதிகரித்து சவரனுக்கு ரூ. 1,06,720-க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 7,600 வரை குறைந்த நிலையில், மாலையில் ரூ. 5,360 வரை அதிகரித்துள்ளது.

இதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 15 அதிகரித்து ரூ. 250 என விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2,50,0000 (கட்டி வெள்ளி) ஆக விற்பனையாகிறது.

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இந்தியாவில் தங்கம், வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில் காலையும் மாலையும் இரண்டு முறையும் தங்கம் விலை குறைந்த நிலையில், மாலையில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் தங்கம் விலை ஏற்றம் அடைந்துள்ளது.

Summary

Gold prices rise after falling

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.