ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஹூண்டாய் வெர்னா காரை அறிமுகம் செய்துள்ளது.
தென்கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய சந்தை வர்த்தகத்தைக் கொண்டுள்ளது.
ஹேட்ச்பேக், செடான் மற்றும் எஸ்யூவி என பல்வேறு வகையான கார்களை உற்பத்தி செய்யும் ஹூண்டாய் நிறுவனத்தில் ஐ10, ஐ20, ஆரா, வென்யூ, வெர்னா, கிரெட்டா போன்ற கார்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஹூண்டாய் நிறுவனத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெர்னா கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் இரண்டு விதமான என்ஜின்களில் கிடைக்கிறது.
என்ஜின்
1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் 115 குதிரைத் திறனையும், 144 முறுக்குவிசைத் திறனையும் வழங்கும். 1.5 விட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 160 குதிரைத் திறனையும் 253 என்.எம். முறுக்குவிசைத் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு என்ஜின்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு கியர்கள் வழங்கப்பட்டுள்ளன. டர்போ என்ஜினில் 7 ஸ்பீடு டுயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுக்கான தேர்வையும் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரை மற்றும் டிரைவர் டிஸ்பிளே கிடைக்கின்றன. மேலும், டாப் வேரியண்ட்டில் 7 ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் பின்புற பார்வைக்காக டேஷ் கேம்கள் போன்ற பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இளம் தலைமுறையினரான ஜென்ஸீக்களைக் கவரும் வகையில், 8 ஸ்பீக்கர்கள், குரல் உதவியுடன் 350 கட்டளைகளுக்கு செயல்படும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை எவ்வளவு?
இந்த கார் ஹெச்.எக்ஸ் 2. ஹெச்.எக்ஸ் 4, ஹெச்.எக்ஸ் 6, ஹெச்.எக்ஸ் 6 பிளஸ், ஹெச்.எக்ஸ் 8 மற்றும் ஹெச்.எக்ஸ் 10 போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது.
தொடக்க வேரியண்டான பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலின் ஷோரூம் விலை சுமார் ரூ.10.98 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்டான ஹெச்.எக்ஸ் 8 விலை சுமார் ரூ.14.88 லட்சம். பெட்ரோல் சி.வி.டி.வேரியண்டில் தொடக்க மாடலான ஹெச்.எக்ஸ் 6 விலை ரூ. 14.40 லட்சம், டாப் வேரியண்டான ஹெச்.எக்ஸ் 10 விலை ரூ. 17.5 லட்சம். டர்போ பெட்ரோல் வேரியண்டில் ஹெச்.எக்ஸ் 8 மட்டும் கிடைக்கிறது.
இதன் ஷோரூம் விலை ரூ.16.28 லட்சம். டர்போ பெட்ரோல் டி.சி.டி. வேரியண்டின் தொடக்க விலை ரூ.17.62 லட்சம் மற்றும் டாப் வேரியண்ட் விலை ரூ.18.25 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Automobiles today are far more than just a mode of transportation. They reflect personality, ambition and lifestyle. Recognising this shift, Hyundai Motor India Limited (HMIL) has introduced the 2026 Hyundai Verna facelift, a sedan that blends futuristic design, advanced technology and engaging performance.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹூண்டாய் கார் பிரியர்களுக்கு... கிராண்ட் ஐ10 நியாஸ் வைப்!

தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலைகள் அதிர்ச்சி தருமா? அதுவும் ரூ.18, ரூ.35 வரை!!

பெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு

ஹூண்டாய் காா்கள் விலை மே மாதம் முதல் உயா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

