கார் விற்பனையில் எப்போதும் முன்னணியில் இருக்கும் மகிந்திரா நிறுவனம், தனது அடுத்த எலெக்ரிக் காரான பிஇ 7 மாடலை 2027-ல் சந்தைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிஇ07 என்ற மின்சார வாகனத்தை மகிந்திரா நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. அதே மாடல் 2027-ல் உற்பத்தி பதிப்பாக அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, 2026ல் மகிந்திரா நிறுவனம் பிஇ 6, எக்ஸ்.இ.வி. 9இ, எஸ்.இ.வி 9எஸ் ஆகிய எலெட்ரிக் மாடல்களை அறிமுகப்படுத்தியது.
அந்தவகையில், 2027-ல் அறிமுகமாகும் இந்த கார் நிறுவனத்தின் நான்காவது இவி காராகும். பிஇ வரிசையில் இரண்டாவது ஆகும்.
சிறப்பம்சங்கள் என்ன?
இந்த கார் சுமார் 4.6 மீட்டர் நீளத்துடன், 5 சீட்டர் வேரியண்டாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் உள்புறத்தில் 3 ஸ்கிரீன் டிஸ்ப்ளே 12.3 இன்ச். லெவல் 2 பிளஸ் ஆடாஸ், ஒடிஏ அப்டெட்ஸ் மற்றும் பனோரமிக் கிளஸ் ரூஃப் கொண்டது.
60 கிலோவாட் மணி முதல் 80 கிலோவாட் மணி திறன் கொண்ட பேட்டரி விருப்பங்கள் வழங்கப்படலாம்.
இதன் ஆரம்ப ஷோரூம் விலை ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.
எஸ்யுவி கார்களில் மகிந்திரா பிஇ 7 மேம்படுத்தப்பட்ட பல்வேறு அம்சங்களுடன் 2027ல் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. காத்திருப்போம்..
Summary
Mahindra BE.07 EV began India road testing in March 2026, with a 2027 launch expected at ₹25 to ₹30 Lakh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹூண்டாய் கார் பிரியர்களுக்கு... கிராண்ட் ஐ10 நியாஸ் வைப்!

10 நிமிடம் சார்ஜ் செய்தால் 300 கி.மீ. பயணம்! 1 மணி நேரத்தில் 3,100 மின்சார கார்கள் முன்பதிவு!
அஜித்குமாருக்கு எஸ்யூவி கார் பரிசு வழங்கிய மஹிந்திரா நிறுவனம்!

மகிந்திரா 9இ சினிலக்ஸ்: புது எடிஷன் அறிமுகம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



