லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

போர்ச் சூழலால் தொடர்ந்து உயரும் கச்சா எண்ணெய் விலை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயா்ந்தது.

News image

கச்சா எண்ணெய்

Updated On :3 மார்ச் 2026, 3:02 pm

சிங்கப்பூர்: மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயா்ந்து வருகிறது.

ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலிய மோதல் விரிவடைந்து வருவதாலும், ஹோா்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாலும், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதை தொடா்ந்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை $3க்கு மேல் உயர்ந்ததுள்ளது.

இதன் எதிரொலியாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில், பீப்பாய் ஒன்றுக்கு $80.89 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 4.1 சதவீதம் அதிகம். மேலும் திங்கள்கிழமை, ஒப்பந்தம் $82.37 ஆக உயர்ந்தது வா்த்தகமானது.

மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் விலை $2.55 உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு $73.78 ஆக உள்ளது. ஜூன் 2025 க்குப் பிறகு இது அதன் அதிகபட்ச விலை என்ற அளவில் உள்ளது.

அதிகரித்து வரும் மத்திய கிழக்கு மோதல், உள்ளிட்டவையால், வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என்று நிபுணா்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒருவேளை, ஹோா்முஸ் நீரிணை நீண்ட காலம் மூடப்பட்டாலோ அல்லது வளைகுடா நாடுகளின் எண்ணெய் கிணறுகள் சேதமடைந்தாலோ, கச்சா எண்ணெய் விலை கட்டுக்கடங்காமல் உயர வாய்ப்புள்ளது. மாறாக, மோதல் விரைவில் முடிவுக்கு வந்தால், கச்சா எண்ணெய் விலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.