ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உற்பத்தித் திறனை ஆண்டுக்கு இரட்டிப்பாக்க இலக்கு: வேதாந்தா அலுமினியம்

வேதாந்தா அலுமினியம், உள்கட்டமைப்பு, வாகன மற்றும் மின்மயமாக்கல் துறைகளில் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, தனது உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது.

கோப்புப்படம்

Published On :22 ஜூன் 2026, 10:31 pm IST

புதுதில்லி: மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் சமீபத்தில் பட்டியலிடப்பட்ட வேதாந்தா அலுமினியம் மெட்டல் லிமிடெட், உள்கட்டமைப்பு, வாகன மற்றும் மின்மயமாக்கல் துறைகளில் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, தனது உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 60 லட்சம் டன்னாக இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளதாக இன்று தெரிவித்தது.

வேதாந்தா குழுமத்தின் பிரிப்பு மே 1 ஆம் தேதியன்று வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வேதாந்தா அலுமினியம் மெட்டல் லிமிடெட் ஜூன் 15 முதல் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக வர்த்தகத்தைத் தொடங்கியது.

நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 30 லட்சம் டன்னாக இருக்கும் நிலையில், உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 60 லட்சம் டன்னாக இரட்டிப்பாக்கும் தொலைநோக்குப் பார்வை, ஆழமான ஒருங்கிணைப்பு, தரத்தை பேணி காப்பதும், உலகளாவிய சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வதும், உள்கட்டமைப்பு, வாகனத் துறை, மின்மயமாக்கல் உள்ளிட்ட துறையில் நீண்டகால சாதகமான சூழல்களிலிருந்தும் நிறுவனம் பயனடைய உள்ளது.

இதற்கிடையில் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் மிகப்பெரிய அலுமினியம் உற்பத்தியாளராக உருவெடுக்கும் நிலையில் உள்ளது இந்நிறுவனம்.

Summary

Vedanta Aluminium Metal to double production capacity.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.