மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய தலைவராக இந்தியரான குணால் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
க்ரெட் (CRED) என்னும் நிதியியல் தொழில்நுட்ப (Fintech) நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாகத் தலைவருமான குணால் ஷா, வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
க்ரெட் செயலி இந்தியாவில் பிரீமியம் நிதிச் சேவை செயலியாக செயல்பட்டு வருகின்றது. இதன் மூலம், வெவ்வேறு கிரெடிட் கார்டிகளுக்கான பில்களை ஒரே செயலியின் மூலம் இணைத்து பணம் செலுத்த முடியும். அதேபோல மறைமுக வரி அறிதல், தள்ளுபடி கூப்பன்கள், பிற கட்டணங்களை டிஜிட்டல் முறையில் கிரெடிட் கார்ட் வழியே செலுத்துதல் போன்ற வசதிகளை இச்செயலி வழங்கி வருகின்றது.
வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, கிரெட் நிறுவனத்தில் சுமார் ரூ. 8,550 கோடி முதலீடு செய்து, அதன் 20% பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. இந்த முதலீட்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக குணால் ஷா, வாட்ஸ் ஆப் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார்.
க்ரெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து இவர் விலகியதைத் தொடர்ந்து, தற்காலிகத் தலைவராக மித்தன் சம்பத் நியமிக்கப்பட்டார். க்ரெட் நிறுவனத்தின் சொந்தப் பங்குகளைத் தொடர்ந்து வைத்திருக்கும் குணால் ஷா, அந்நிறுவனத்தின் தரவுகளை ஒருபோதும் மெட்டாவுடன் பகிரமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான பயனர்களை வைத்துள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம் அதன்மூலம் வருமானம் ஈட்டுவதில் சவாலைச் சந்தித்து வருகின்றது. இந்த நிலையில், க்ரெட் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தும் குணால் ஷாவை தலைவராக நியமித்து வாட்ஸ் ஆப் நிறுவனத்தை டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் பல வசதிகள் மூலம் வருவாயை அதிகரிக்க மெட்டா திட்டமிட்டுள்ளது.
குணால் ஷா வருகையைத் தொடர்ந்து, வாட்ஸ் ஆப்பின் தற்போதைய தலைவரான வில் காத்கார்ட் பதவி விலகினார். அவர், தற்போது அடுத்த தலைமுறைக்கான புதிய தயாரிப்புகளை உருவாக்கும் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Summary
Indian national Kunal Shah has been appointed as the new head of WhatsApp.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநகராட்சி 'வாட்ஸ் ஆப்' சேவை: 1.86 லட்சம் பேர் பயன்

சொத்து, குடிநீா் வரிகளை வாட்ஸ் ஆப் மூலம் செலுத்தலாம்

‘வாட்ஸ் ஆப்பில் குடிநீா், கழிவுநீா் கட்டணங்களைச் செலுத்தலாம்’

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வாட்ஸ் ஆப்பில் அறிந்துகொள்வது எப்படி? எளிய வழி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


