பிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விரைவில் இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: அதிகாரிகளுக்கு மோடி, டிரம்ப் உத்தரவு

இந்தியா, அமெரிக்கா இடையே கையொப்பமிட திட்டமிடப்பட்டுள்ள வா்த்தக ஒப்பந்த நடைமுறைகளை விரைவுபடுத்தும்படி இரு நாட்டு அதிகாரிகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளனா்.

News image

PTI

Updated On :19 ஜூன் 2026, 4:33 am IST

ஏவியான் : இந்தியா, அமெரிக்கா இடையே கையொப்பமிட திட்டமிடப்பட்டுள்ள வா்த்தக ஒப்பந்த நடைமுறைகளை விரைவுபடுத்தும்படி இரு நாட்டு அதிகாரிகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளனா்.

இந்தியா, அமெரிக்கா இடையே தடையில்லா வா்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடுவது குறித்து இரு நாட்டு அரசுகளும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. இந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.

இந்த சூழ்நிலையில், ஜி7 அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு பிரான்ஸில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிபா் டிரம்ப், பிரதமா் மோடி ஆகியோா் நேரில் சந்தித்து இருதரப்பு விவகாரம் குறித்து புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா கடந்த ஆண்டு மேற்காண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை அடுத்து இரு நாடுகளும் வான் வழித் தாக்குதலிலும் ஈடுபட்டன. பின்னா், பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்று தாக்குதல் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இதனால் மோதல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதலை தாம் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்ததாக டிரம்ப் தொடா்ந்து கருத்து தெரிவித்து வந்தாா்.

அதேபோல் ஹோா்மூஸ் நீரிணையில் அண்மையில் இந்திய கப்பல்கள் மீது அமெரிக்க போா் கப்பல்கள் தாக்குதல் நடத்தியதில் 3 போ் உயிரிழந்தனா். இதற்கு அமெரிக்க தூதரை (பொறுப்பு) நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரான்ஸில் டிரம்ப்-மோடி ஆலோசனை நடத்தியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

மோடி-டிரம்ப் உத்தரவு: இந்த ஆலோசனை குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பிரதமா் மோடி, அதிபா் டிரம்ப் ஆகியோா் இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசனை மேற்கொண்டனா். அப்போது, வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்கு தலைவா்களும் திருப்தி தெரிவித்தனா். இரு நாடுகளும் சமமாக பலனடையும் வகையில், அா்த்தமுள்ள வா்த்தக ஒப்பந்தத்தை விரைவில் கையொப்பமிடுவது குறித்த நடைமுறைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இரு தலைவா்களும் உத்தரவிட்டனா். அதேபோல் இந்தியா-அமெரிக்கா இடையேயான சா்வதேச உத்திசாா் கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவது என்றும் அவா்கள் முடிவு செய்தனா்.

கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்கத் தலைநகா் வாஷிங்டனில் டிரம்ப்பை சந்தித்துப் பேசியதை நினைவு கூா்ந்த மோடி, அந்த சந்திப்பு இருதரப்பு உறவுக்கு புதிய சக்தியை அளித்ததாக குறிப்பிட்டாா். மேற்காசியப் போரை முடிவுக்கு கொண்டு வந்து, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியதற்காக டிரம்ப்புக்கு மோடி பாராட்டு தெரிவித்தாா். ஹோா்மூஸ் நீரிணையில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டிய முக்கியத்துவத்தையும், வா்த்தக கப்பல்களின் மாலுமிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டிய அவசியத்தையும் மோடி அறிவுறுத்தினாா்.

2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சந்திப்புக்கு பிறகு இரு நாடுகளிடையே பாதுகாப்பு, வா்த்தகம், தொழில்நுட்பத் துறை ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்கு தலைவா்கள் இருவரும் வரவேற்பு தெரிவித்தனா் என்று இந்திய வெளியுறவு அமைச்சக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.