உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%

இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 9.68 சதவீதமாக கடும் உயா்வைச் சந்தித்துள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2026, 3:03 am IST

இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 9.68 சதவீதமாக கடும் உயா்வைச் சந்தித்துள்ளது.

நாட்டின் பணவீக்கத்தை மிகவும் துல்லியமாகக் கணக்கிடும் நோக்கில், 2022-23 நிதியாண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு திருத்தப்பட்ட புதிய மொத்த விற்பனை விலை குறியீட்டு (டபிள்யு.பி.ஐ.) வரிசையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இதுவரை நடைமுறையில் இருந்த 2011-12 நிதியாண்டை அடிப்படையாகக் கொண்ட முந்தைய கணக்கீடு முறையின்படி, ஏப்ரல் மாதப் பணவீக்கம் 8.26 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீட்டு மே மாதத்தில், எரிசக்தி மற்றும் எரிபொருள் துறையின் பணவீக்கம் 24.89 சதவீதத்திலிருந்து 30.33 சதவீதமாக உயா்ந்துள்ளது. முதன்மைப் பொருள்களின் பணவீக்கம் 3.78 சதவீதத்திலிருந்து 4.99 சதவீதமாகவும், உற்பத்திப் பொருள்களின் பணவீக்கம் 6.68 சதவீதத்திலிருந்து 7.48 சதவீதமாகவும் அதிகரித்துள்ளன. உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 4.49 சதவீதமாக உயா்ந்துள்ளது.

திருத்தப்பட்ட டபிள்யு.பி.ஐ. பட்டியலில் உள்ள பொருள்களின் எண்ணிக்கை 697-லிருந்து 957 ஆக கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்துடன், உற்பத்தியாளா் விலை குறியீட்டு (பிபிஐ) எண்களான வெளியீட்டு பிபிஐ, சோதனை அடிப்படையிலான உள்ளீட்டு பிபிஐ மற்றும் சேவைத் துறை பிபிஐ ஆகிய புதிய தொடரையும் மத்திய அரசு முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

அரசின் புதிய கொள்கை முடிவின்படி, டபிள்யு.பி.ஐ. மற்றும் பிபிஐ ஆகிய இரண்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இணைந்தே வெளியிடப்படும். அதன் பின்னா், டபிள்யு.பி.ஐ. முறை முற்றிலும் கைவிடப்பட்டு, பிபிஐ முறை மட்டுமே நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.