மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

சென்செக்ஸ் 544.15 புள்ளிகள் உயர்ந்து 76,808.48 புள்ளிகளாகவும், நிஃப்டி 135.25 புள்ளிகள் உயர்ந்து 23,989.15 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

மும்பை பங்குச் சந்தை - DIN

Updated On :16 ஜூன் 2026, 6:18 pm IST

மும்பை: அமெரிக்கா - ஈரானுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தம் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவு உள்ளிட்டவையால், உலகளாவிய பங்குச் சந்தையில் நிலவிய சாதகமான சூழலால் இன்றைய வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 3வது நாளாக உயர்ந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 582.41 புள்ளிகள் அதிகரித்து 76,846.74 புள்ளிகளை எட்டிய நிலையில், நிஃப்டி148.7 புள்ளிகள் உயர்ந்து 24,002.60 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 544.15 புள்ளிகள் உயர்ந்து 76,808.48 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 135.25 புள்ளிகள் உயர்ந்து 23,989.15 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் எச்.சி.எல். டெக், பஜாஜ் ஃபின்சர்வ், என்.டி.பி.சி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் இன்டர்குளோப் ஏவியேஷன், அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.

நிஃப்டி-யில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டாடா கன்சூமர், எச்யுஎல், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் என்டிபிசி ஆகிய பங்குகள் உயர்ந்ன. மறுபுறம் ஹிண்டால்கோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எச்.டி.எஃப்.சி. லைஃப், ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.

நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடுகள் தலா 0.4 சதவீதம் உயர்ந்தன.

அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் தணிவது குறித்த நம்பிக்கை மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றால் பங்குச் சந்தை, தொடர்ந்து மீட்சிப் பாதையைத் நோக்கி பயணித்தது. இதில் தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், எஃப்எம்சிஜி மற்றும் எண்ணெய் & எரிவாயு உள்ளிட்ட துறைகள் ஏற்றம் கண்டன.

ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கி 225 குறியீடுகள் உயர்வுடன் நிறைவடைந்த நிலையில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடும் சரிவுடன் நிறைவடைந்தன.

ஐரோப்பியச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின. நேற்று அமெரிக்க பங்குச் சந்தைகள் உயர்ந்து நிறைவடைந்தன. இதில் நாஸ்டாக் காம்போசிட் 3.07 சதவீதமும், எஸ்&பி 500 குறியீடு 1.65 சதவீதமும், டவ் ஜோன்ஸ் இண்டஸ்ட்ரியல் ஆவரேஜ் 0.92 சதவீதமும் உயர்ந்தன.

ஆட்டோ, பார்மா, பொதுத்துறை வங்கி மற்றும் மெட்டல் உள்ளிட்ட துறைகளைத் தவிர, மற்ற அனைத்து துறைசார் குறியீடுகளும் உயர்ந்தன. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் சாதனங்கள், எரிசக்தி, ஊடகம், எஃப்எம்சிஜி மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன.

தரவுகளின் அடிப்படையில், நேற்று வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 200.05 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

டாக்டர் லால் பாத்லேப், யெஸ் வங்கி, கேப்ரி குளோபல், அப்பார் இண்டஸ்ட்ரீஸ், ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஏஎம்சி, ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ், நிப்பான் லைஃப் இந்தியா அசெட் மேனேஜ்மென்ட், ஐஎஃப்சிஐ மற்றும் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 100 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தை எட்டியது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 81.45 டாலராக வர்த்தகமானது.

Summary

Benchmark stock indices Sensex and Nifty rose for the third consecutive day on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.