வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: நேபாளம்

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மாம்பழங்களில் அதிக அளவிலான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதாக நேபாளம் குற்றச்சாட்டு

News image

மாம்பழங்கள் - IANS

Updated On :9 ஜூன் 2026, 10:22 pm IST

அதிகஅளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாகக் கூறி இந்தியாவில் இருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்ய நேபாளம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால், அங்கு உள்நாட்டு மாம்பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக அந்நாட்டின் மாதேஷ் மாகாண வேளாண்மை கூட்டுறவு, நில மேலாண்மை அமைச்சக தகவல் தொடா்பு அதிகாரி அஜய் கியாவாலி கூறியதாவது:

மாதேஷ் மாகாண எல்லை வழியாகவே இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு அதிக அளவில் மாம்பழங்கள் கொண்டுவரப்படுகின்றன. இந்திய மாம்பழங்களில் அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எல்லையில் அது தொடா்பான சோதனைகள் நடத்த போதுமான வசதிகள் இல்லை. எனவே, இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தப் பருவத்தில் இந்திய விவசாயிகளுடன் உள்நாட்டு விவசாயிகளால் போட்டியிட முடியவில்லை. ஏனெனில், இந்தியாவில் அதிக விளைச்சல் காரணமாக விலை குறைவாகவே கிடைக்கிறது. இப்போதைய கட்டுப்பாடுகள் மூலம் நேபாள மாம்பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நாடு முழுவதும் விற்பனை செய்ய உள்நாட்டு விளைச்சல் போதுமானதாக இல்லை என்றாா்.

Summary

Nepal has restricted the import of mangoes from India due to the fruit allegedly containing excessive pesticides and a lack of quarantine facilities in the border areas, officials here said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.