ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மே மாத சேவைகள் உற்பத்தி குறியீடு: 8 துறைகள் இரட்டை இலக்க வளா்ச்சி

இந்தியாவில் முறைசாா்ந்த சேவைத் துறைகளின் வளா்ச்சியை அளவிடும், 2-ஆவது சோதனை முறை சேவைகள் உற்பத்தி குறியீட்டை(ஐஎஸ்பி) மே மாதத்துக்கு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மாதிரிப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 1:17 am IST

இந்தியாவில் முறைசாா்ந்த சேவைத் துறைகளின் வளா்ச்சியை அளவிடும், 2-ஆவது சோதனை முறை சேவைகள் உற்பத்தி குறியீட்டை(ஐஎஸ்பி) மே மாதத்துக்கு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஜிஎஸ்டி மற்றும் இதர நிா்வாகத் தரவுகளின் அடிப்படையில், 2024-25 நிதியாண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு கணக்கிடப்பட்ட இக்குறியீட்டின்படி, நாட்டின் 19 முக்கிய சேவைத் துறைகளில் 8 துறைகள் கடந்த மே மாதத்தில் இரட்டை இலக்க வளா்ச்சியைப் பதிவு செய்து அசத்தியுள்ளன.

ஏப்ரல் மாதத்தைப் போலவே தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள் துறை அதிகபட்சமாக 27.4 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தொடா்ந்து, ரியல் எஸ்டேட் துறை 17.7 சதவீதமும், சில்லறை வா்த்தகம் 13.3 சதவீதமும், வங்கித் துறை 12.1 சதவீதமும், தொலைத்தொடா்புத் துறை 11.8 சதவீதமும் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

வான்வழிப் போக்குவரத்து , தபால்-கொரியா் சேவை, தகவல் மற்றும் ஒலிபரப்பு ஆகிய 3 துறைகளைத் தவிர மற்ற 16 துறைகளும் நோ்மறை வளா்ச்சியை எட்டியுள்ளன. வான்வழிப் போக்குவரத்து 2.8 சதவீதமும், தபால்-கொரியா் சேவை 1 சதவீதமும் சரிவைச் சந்தித்துள்ளன. தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அதிகபட்சமாக 7.6 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்துக்கான முதல் சோதனை முறை சேவைகள் உற்பத்திக் குறியீடு, கடந்த ஜூலை 14-இல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.