ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

செஞ்சுரி பிளைபோர்ட்ஸ் முதல் காலாண்டு நிகர லாபம் 57% அதிகரிப்பு!

நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 57 சதவீதம் உயர்ந்து ரூ. 83.30 கோடியாக உள்ளது.

செஞ்சுரி பிளைபோர்ட்ஸ் (இந்தியா) லிமிடெட்

Published On :31 ஜூலை 2026, 9:43 pm IST

கொல்கத்தா: செஞ்சுரி பிளைபோர்ட்ஸ், பல்வேறு வணிகப் பிரிவுகளில் மூலம் ஈட்டிய வருவாய் வளர்ச்சியின் காரணமாக, ஜூன் 30 உடன் முடிவடைந்த காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 57 சதவீதம் உயர்ந்து ரூ. 83.30 கோடியாக இருப்பதாக இன்று தெரிவித்தது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ. 52.93 கோடியாக இருந்தது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் செயல்பாடுகள் மூலமான நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 1,169.36 கோடியிலிருந்து 33.5 சதவீதம் அதிகரித்து ரூ. 1,561.38 கோடியாக உயர்ந்துள்ளது. அதே வேளையில், மொத்த வருமானம் ரூ. 1,171.24 கோடியிலிருந்து ரூ. 1,563.55 கோடியாக அதிகரித்தது.

மூலப்பொருட்கள், பணியாளர் ஊதியம் மற்றும் பிற செலவுகள் அதிகரித்ததன் காரணமாக, மொத்தச் செலவு ரூ. 1,100.09 கோடியிலிருந்து ரூ. 1,447.27 கோடியாக உயர்ந்துள்ளது.

வணிகப் பிரிவுகளில், பிளைவுட் மற்றும் அது சார்ந்த தயாரிப்புகள் மூலம் தொடர்ந்து மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ள நிலையில், இவற்றின் வருவாய் ஓராண்டுக்கு முன்பு இருந்த ரூ. 650.31 கோடியிலிருந்து ரூ. 861.23 கோடியாக அதிகரித்தது.

லேமினேட் மற்றும் அது சார்ந்த தயாரிப்புகளின் மூலம் வந்த வருவாயானது ரூ. 173.73 கோடியிலிருந்து ரூ. 199.36 கோடியாக அதிகரித்தது. லாஜிஸ்டிக்ஸ் சேவையிலும் அதன் வருவாய் ரூ. 37.76 கோடியிலிருந்து ரூ. 55.86 கோடியாக உயர்ந்துள்ளது.

வரிக்கு முந்தைய லாபத்தைப் பொறுத்தவரை, பிளைவுட் மற்றும் அது சார்ந்த தயாரிப்புகள் பிரிவில், கடந்த ஆண்டு ரூ. 95.33 கோடியிலிருந்து அதிகரித்து ரூ. 142.49 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Century Plyboards (India) Ltd reported a 57 per cent rise in consolidated net profit to Rs 83.30 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.