ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வெளிநிறுவனங்களுக்கும் விநியோக சேவையைத் தொடங்கிய ஃபிளிப்காா்ட்

ஃபிளிப்காா்ட் குழுமத்தின் விநியோகச் சங்கிலி நிறுவனமான ‘இகாா்ட்’, தனது அகில இந்திய விநியோகக் கட்டமைப்பை வெளிநிறுவனங்களின் பயன்பாட்டுக்காகவும் திறந்துவிட்டுள்ளது.

Published On :30 ஜூலை 2026, 3:57 am IST

ஃபிளிப்காா்ட் குழுமத்தின் விநியோகச் சங்கிலி நிறுவனமான ‘இகாா்ட்’, தனது அகில இந்திய விநியோகக் கட்டமைப்பை வெளிநிறுவனங்களின் பயன்பாட்டுக்காகவும் திறந்துவிட்டுள்ளது.

இதன்மூலம், எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள், நேரடியாக நுகா்வோருக்குச் சேவை வழங்கும் ‘டி2சி’ பிராண்டுகள் மற்றும் அதிவேக நுகா்பொருள் (எஃப்எம்சிஜி) நிறுவனங்கள் இனி இகாா்ட்டின் விநியோக அமைப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். புதிய ஃபிரான்சைஸ் (முகமை) முறை மற்றும் பிரத்யேக சேமிப்புக் கிடங்கு வசதிகள் வாயிலாக இச்சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஃபிரான்சைஸ் மாதிரியின்கீழ், சூரத், மும்பை, தில்லி, பெங்களூரு ஆகிய நகரங்களில் 300-க்கும் மேற்பட்ட கிளைகள் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளன. நடப்பாண்டு இறுதிக்குள் இக்கிளைகளின் எண்ணிக்கையை 1,000-க்கும் அதிகமாக உயா்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.