ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆகஸ்ட்டில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள்!

ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகவுள்ள ஸ்மார்ட்போன்கள், அதன் சிறப்பம்சங்கள் குறித்து...

Augest release smart phones

ஸ்மார்ட்போன்கள்

Published On :28 ஜூலை 2026, 4:53 pm IST

புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஆகஸ்ட் மாத காத்திருப்பு பலனளிக்கும் வகையில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன.

கூகுள் பிக்சல் 11 சீரிஸ் முதல் விவோ, போக்கோ, ரெட்மி மற்றும் சாம்சங் நிறுவனத்தில் புதிய ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளன.

ஜூலை மாத வெளியீடாக சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8 ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்து பலரையும் கவர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி ஓப்போ ரெனோ 16 சீரிஸ் வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின.

இதேபோன்று நத்திங் நிறுவனத்தின் 4பி ஸ்மார்ட்போன் சீரிஸ் வெளியாகி பயனர்களைக் கவர்ந்தது. மேலும், ஐக்யூ மற்றும் மோட்டோ நிறுவனங்கள் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தன.

கூகுள் பிக்சல்

இந்தியா உள்பட நாடு முழுவதும் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 11 ஸ்மார்ட்போன் சீரிஸ் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. கூகுள் பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல், பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் ஆகியவை அறிமுகமாகவுள்ளன.

விவோ எஸ் 2

விவோ நிறுவனத்தின் எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளன. இது தொடர்பான நாளை விவோ நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய ரக விலையில் கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவோ எஸ் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்கோ எம் 8 பவர்

போக்கோ நிறுவனத்தின் எம் 8 பவர் ஸ்மார்ட்போன், நாட்டில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அமோலிட் தொடு திரையுடன் 8,000mAh பேட்டரி திறன் கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைக் கொண்டதாக போக்கோ எம் 8 இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 17

ரெட்மி நிறுவனத்தின் நோட் 17 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பரிசோதனைகள் சென்றுகொண்டிருப்பதால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. 50 மெகா பிக்சல் கேமரா, 8,000mAh பேட்டரி திறன், ஓ.எல்.இ.டி. திரை போன்ற அம்சங்களைக் கொண்டதாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஃப்70 ப்ரோ

ஆகஸ்ட் மாத இறுதியில் கேலக்ஸி எஃப் 7 ப்ரோ வரிசை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய சாம்சங் திட்டமிட்டுள்ளது. 6.7 அங்குல அமோடிட் திரை, 6,000mAh பேட்டரி திறன், 50 மெகா பிக்சல் கேமரா, திரை சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

August 2026 smartphone launches: 5 phones worth waiting for

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.