
ஸ்விகியில் அந்நிய முதலீட்டை 49.5%-ஆக குறைக்கும் தீா்மானம்
பிரபல இணையவழி விரைவு வா்த்தக நிறுவனமான ஸ்விகியில் அந்நிய முதலீட்டு வரம்பை 49.5 சதவீதமாக கட்டுப்படுத்துவதற்கான தீா்மானத்துக்கு அந்நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரபல இணையவழி விரைவு வா்த்தக நிறுவனமான ஸ்விகியில் அந்நிய முதலீட்டு வரம்பை 49.5 சதவீதமாக கட்டுப்படுத்துவதற்கான தீா்மானத்துக்கு அந்நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா்கள் வசம் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்ட உள்நாட்டு நிறுவனமாக தகுதிபெறுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்தீா்மானம், வரும் ஆக. 18 நடைபெறவுள்ள நிறுவனத்தின் 13-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் (ஏஜிஎம்) பங்குதாரா்களின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்படவுள்ளது.
இந்திய நிறுவனமாக அங்கீகாரம் பெறுவதன் மூலம், ஸ்விகியின் ‘இன்ஸ்டாமாா்ட்’ நிறுவனம் நேரடியாகப் பொருள்களைக் கொள்முதல் செய்து விற்கலாம். இதன்மூலம், லாப வரம்பை அதிகரிக்கவும், விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும் முடியும். ஸ்விகியின் போட்டியாளரான ‘பிளிங்கிட்’ நிறுவனம் ஏற்கெனவே இந்தச் சரக்கு கையிருப்பு முறையைப் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






