ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கூகுள் போட்டோஸில் விடியோ எடிட் செய்யலாம்! எப்படி தெரியுமா?

கூகுள் போட்டோஸ் செயலியில் உள்ள புதிய விடியோ எடிட்டிங் அம்சம் பற்றி...

Google

கூகுள் - கோப்புப் படம்

Published On :10 ஜூலை 2026, 3:04 pm IST

கூகுள் போட்டோஸ் செயலியிலேயே விடியோக்களை எடிட் செய்யும் வகையில் ”விடியோ ரீமிக்ஸ்” (Video Remix) என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமான கூகுள் போட்டோஸ் செயலியை சர்வதேச அளவில் 100 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

செய்யறிவு தொழில்நுட்பம் நாளுக்குநாள் வளர்ச்சி அடைந்து வருவதையொட்டி, கூகுளின் அனைத்து செயலிகளிலும் செய்யறிவு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கூகுள் போட்டோஸ் செயலியிலேயே விடியோக்களை எடிட் செய்யும் வகையில் ”விடியோ ரீமிக்ஸ்” என்ற புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் முதல்கட்டமாக இந்தியா, அமெரிக்கா, துருக்கி, ஜப்பான், பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து போன்ற நாடுகளில் உள்ள கூகுள் ஏஐ ப்ளஸ், ப்ரோ, அல்ட்ரா போன்ற சந்தாதாரர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் அதிநவீன ஜெமினி ஓம்னி ஏஐ தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த அம்சம், தனியே விடியோ எடிட்டிங் கருவிகள் ஏதுமின்றி பின்னணி இசையை சேர்ப்பது, விடியோக்களை அனிமேஷன் வடிவங்களாக மாற்றுவது, இருட்டாக உள்ள விடியோக்களை ஒளி வடிவங்களாக மாற்றுவது போன்ற வேலைகளை செய்யும்.

இந்த அம்சத்தைப் பயன்படுத்த சந்தாதாரர்கள் செயலியை அப்டேட் செய்து, கூகுள் போட்டோஸில் உள்ள கிரியேட் (Create) ஐ தேர்ந்தெடுத்து, பின்னர் அதில் உள்ள விடியோ ரீமிக்ஸ் ஆப்ஷன் மூலம் விடியோக்களை எடிட் செய்து கொள்ளலாம்.

Summary

A new feature called "Video Remix" has been introduced, allowing users to edit videos directly within the Google Photos app.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.