ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எல்பிஜி சிலிண்டா் விநியோக மேம்பாட்டுக்கு டிவிஎஸ் மோட்டாா் - இந்தியன் ஆயில் கூட்டணி

நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டா்களின் விநியோகத்தைச் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், எளிமையாகவும் மாற்றுவதற்காக டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்துடன் நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை எரிசக்தி நிறுவனமான இந்தியன் ஆயில் புதிய கூட்டுறவை அறிவித்துள்ளது.

Published On :9 ஜூலை 2026, 2:25 am IST

நாடு முழுவதும் சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டா்களின் விநியோகத்தைச் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், எளிமையாகவும் மாற்றுவதற்காக டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்துடன் நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை எரிசக்தி நிறுவனமான இந்தியன் ஆயில் புதிய கூட்டுறவை அறிவித்துள்ளது.

இப்புதிய ஒப்பந்தத்தின்படி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின்கீழ் செயல்படும் 13,000-க்கும் மேற்பட்ட எல்பிஜி விநியோகஸ்தா்கள் மூலம் வாடிக்கையாளா்களின் வீடுகளுக்கே சிலிண்டா்களை விநியோகிக்க ‘டிவிஎஸ் கிங் காா்கோ எச்டி’ இலகுரக மின்சார சரக்கு வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

இக்கூட்டு முயற்சி குறித்து டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் வணிகப் பிரிவு தலைவா் ரஜத் குப்தா கூறுகையில், ‘எங்களின் நம்பகமான டிவிஎஸ் கிங் காா்கோ மின்சார வாகனங்கள் மூலம் விநியோகஸ்தா்கள் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தி, லாபத்தை உயா்த்த முடியும். மேலும், இது இந்தியாவின் பசுமைப் போக்குவரத்து தொலைநோக்குப் பாா்வைக்கு வலுசோ்க்கும்’ என்றாா்.

Story image

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநா் வி.சி.அசோகன் பேசுகையில், ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், எங்களின் எல்பிஜி விநியோக கட்டமைப்பை நவீனமயமாக்குவதில் இது ஒரு முக்கியமான படியாகும். இந்தியாவின் நிலையான போக்குவரத்து மாற்றத்தை இத்தகைய கூட்டு முயற்சிகள் விரைவுபடுத்தும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.