ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மின்னஞ்சல்களை ஒரு முறை மட்டும்தான் படிக்க முடியும்! கான்பிடென்ஷியல் மோட் பற்றித் தெரியுமா?

ஜிமெயிலில் உள்ள கான்பிடென்ஷியல் மோட் பற்றி...

 Gmail

மின்னஞ்சல் - பிரதிப்படம்

Published On :2 ஜூலை 2026, 4:51 pm IST

ஜிமெயிலில் உள்ள கான்பிடென்ஷியல் மோட்-ல் (Confidential Mode) அனுப்பப்படும் மின்னஞ்சல்களை ஒருமுறை மட்டுமே படிக்க முடியும்.

தொழில்நுட்ப வசதிகளுக்கேற்ப நாம் பயன்படுத்தும் தகவல் தொடர்பு சாதனங்களில் பல்வேறு புதிய அப்டேட்டுகள் வந்துகொண்டேதான் உள்ளது.

இந்த வரிசையில், நாம் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பினால் அதனை அவர் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும் (வியூ ஒன்ஸ்) என்ற வசதி வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் உள்ளது நமக்குத் தெரியும். ஆனால் அதே வசதி ஜிமெயிலிலும் உள்ளது, அதற்குப் பெயர்தான் கான்பிடென்ஷியல் மோட்.

இந்த கான்பிடென்ஷியல் மோட்-ல் நாம் ஒருவருக்கு அனுப்பும் செய்தியை அவர் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். அதிலும் குறிப்பாக அந்த செய்தி எவ்வளவு நேரம் அவருக்கு காட்ட வேண்டும் என்ற நேரத்தையும் மின்னஞ்சல் அனுப்புபவரே தீர்மானிக்க முடியும். மேலும், நாம் அனுப்பிய செய்தியை எப்போது வேண்டுமானாலும் நம்மால் ரத்துசெய்ய முடியும்.

இதுமட்டுமல்லாமல், தகவல்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஓடிபி (ஒருமுறை கடவுச்சொல்) வசதியும் உள்ளது. அதன்படி, நாம் அனுப்பும் செய்தியை பெறுநர் அவருடைய அலைபேசிக்கு வரும் ஓடிபியை உள்ளிட்ட பிறகே படிக்க முடியும்.

இதன்மூலம் நாம் மற்றவர்களுக்கு ரகசியமாக அனுப்பும் மின்னஞ்சல்களின் தகவல்கள் பாதுகாக்கப்படுவதாக ஜிமெயில் தரப்பில் சொல்லப்படுகிறது.

Summary

Emails sent using Gmail's Confidential Mode can be read only once.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.