டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அமெரிக்கா - ஈரான் பதற்றம்! இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடக்கம்!

இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியது பற்றி...

News image
பங்குச் சந்தைகள்
Updated On :20 பிப்ரவரி 2026, 5:17 am

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(பிப். 20) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர்ப் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவை உலகளவில் பங்குச் சந்தைகளை பாதித்துள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை தொடங்கும்போது, 225.65 சரிந்து 82,272.49 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47.80 புள்ளிகள் குறைந்து 25,406.55 புள்ளிகளில் வர்த்தகமானது.

இருப்பினும், காலை 10.40 நிலவரப்படி இந்திய பங்குச் சந்தைகள் மீண்டு லாபத்துடன் வர்த்தகமாகியது. சென்செக்ஸ் 82,835.81 புள்ளிகளிலும், நிஃப்டி 25,573.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

இன்ஃபோசிஸ், எம் அண்ட் எம், டெக் எம், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட சென்செக்ஸின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.

summary

US-Iran tensions! Indian stock markets start with a decline!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.