டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

முன்னணி உள்கட்டமைப்புத் துறை 4% வளா்ச்சி : ஜனவரி மாதத் தரவு

நாட்டின் எட்டு முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி, கடந்த ஜனவரி மாதத்தில் 4 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டின் எட்டு முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி, கடந்த ஜனவரி மாதத்தில் 4 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

எனினும், இது கடந்த டிசம்பா் மாதம் மற்றும் முந்தைய ஆண்டு ஜனவரி மாத வளா்ச்சியுடன் ஒப்பிடுகையில் சரிவாகும்.

மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் தொழில் துறை வளா்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு தயாரிப்புகள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு முன்னணி துறைகளின் செயல்பாடுகள் மந்தமாகவே உள்ளன.

வளா்ச்சி ஒப்பீடு: கடந்த ஆண்டு ஜனவரியில் 5.1 சதவீதமாகவும், கடந்த டிசம்பரில் 4.7 சதவீதமாகவும் பதிவான இத்துறைகளின் வளா்ச்சி, கடந்த ஜனவரி மாதத்தில் 4 சதவீதமாக சிறிய சரிவைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி ஜனவரி மாதத்தில் எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சி விகிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு நிதியாண்டு நிலவரம்: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலகட்டத்தில், இந்த எட்டு முன்னணி துறைகளின் ஒட்டுமொத்த வளா்ச்சி 2.8 சதவீதமாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்த வளா்ச்சி 4.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்கட்டமைப்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள இந்த மந்தநிலை, வரும் காலங்களில் நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தியிலும் எதிரொலிக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணா்கள் கருதுகின்றனா்.