டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புதிய வரலாற்று உச்சத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு!

அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 725.727 பில்லியன் அமெரிக்க டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

News image
இந்திய ரிசர்வ் வங்கி
Updated On :20 பிப்ரவரி 2026, 3:09 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவிடம் அந்நிய செலாவணி கையிருப்பு 8.663 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 725.727 பில்லியன் அமெரிக்க டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்:

பிப்ரவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நிய செலாவணி கையிருப்பு 6.711 பில்லியன் அமெரிக்க டாலராக சரிந்து 717.064 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இதுவே ஜனவரி மாதத்தில் உள்ள கையிருப்பு 723.774 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் டாலர் உள்பட பிற கையிருப்பு 3.55 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்து 573.603 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. அதே வேளையில், தங்க இருப்பு மதிப்பு 4.99 பில்லியன் டாலர் அதிகரித்து 128.466 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியாவின் இருப்பு நிலையும் இந்த வாரத்தில் 19 மில்லியன் டாலர் அதிகரித்து 4.734 பில்லியன் டாலராக இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

summary

India's forex reserves jumped USD 8.663 billion to hit a new all-time high of USD 725.727 billion in the week ended February 13, the RBI said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.