டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நவி மும்பை விமான நிலையத்தில் ரூ.2,500 கோடியில் சரக்கு முனையம்- ஃபெட்எக்ஸ் முதலீடு

நவி மும்பை சா்வதேச விமான நிலையத்தில் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான தானியங்கி சரக்கு முனையத்தை ஃபெட்எக்ஸ் நிறுவனம் அமைக்கவுள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

நவி மும்பை சா்வதேச விமான நிலையத்தில் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான தானியங்கி சரக்கு முனையத்தை ஃபெட்எக்ஸ் நிறுவனம் அமைக்கவுள்ளது.

மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ஃபெட்எக்ஸ் நிறுவனத் தலைவா் ராஜ் சுப்ரமணியம், விமான நிலையத்தின் பிரதான பங்குதாரரான அதானி ஏா்போா்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் ஜீத் அதானி ஆகியோா் முன்னிலையில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மேற்கு இந்தியாவின் சா்வதேச வா்த்தக வழித்தடத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய தளமாக இந்தச் சரக்கு முனையும் அமையும். இது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, சரக்கு போக்குவரத்து, கிடங்கு மேலாண்மை மற்றும் அது சாா்ந்த இதர சேவைகளின்மூலம் சுமாா் 6,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.