டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் உலக பொருளாதாரத்தில் நான்கில் ஒருபங்கை ஈர்க்கும்!

உலக பொருளாதாரத்தில் நான்கில் ஒருபங்கை ஈர்க்கும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்...

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 4:32 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ‘உண்மையில் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய்’ என்று வணிகத்துறை செயலர் ராஜேஷ் அக்ரவால் செவ்வாய்க்கிழமை(பிப். 10) தெரிவித்தார்.

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே கடந்த கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை, 18 ஆண்டுகள் இழுபறிக்குப் பிறகு தில்லியில் கடந்த மாதம் இறுதி செய்யப்பட்டது. அதன்படி, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 93 சதவீத பொருள்களுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளில் வரிவிலக்கு அளிக்கப்படும்; அதுபோல, ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 90 சதவீத பொருள்களுக்கு 10 ஆண்டு காலத்துக்கு இந்தியா வரிவிலக்கு அளிக்கும். அதோடு, இரு தரப்பிலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், தடையற்ற மக்கள் போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தம் மற்றும் தடையற்ற மக்கள் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் கையொப்பமாகின.

உலக வர்த்தகத்தில் மக்கள் பல சவால்களை எதிர்கொள்ளும் இன்றைய உலகில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று இதுவென்றும் குறிப்பிட்ட அவர், இந்திய, ஐரோப்பிய சந்தைகள் மட்டுமில்லாது உலகின் பிற பகுதிகளுக்கும் நாம் சேவையளிக்க முடியும் என்று நினைப்பதாக தெரிவித்தார். மேலும், உலக பொருளாதாரத்தில் நான்கில் ஒருபங்கினை இந்த ஒப்பந்தம் ஈர்த்துக்கொண்டு வரும் என்றார்.

summary

The free trade agreement between India and the EU is 'truly a mother of all deals' as it brings together nearly one-fourth of the global economy, Commerce Secretary Rajesh Agrawal said on Tuesday here.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.