பிரிட்டானியா 3வது காலாண்டு லாபம் 17% அதிகரிப்பு!
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் அதன் 3வது காலாண்டு நிகர லாபம் ரூ.682.14 கோடியாக உயர்ந்துள்ளதாக இன்று அறிவித்தது.


புதுதில்லி: இந்தியாவின் முன்னணி உணவு நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், மிகவும் நம்பகமான உணவு பிராண்டுகளில் ஒன்றாகும்.
பேக்கரி உணவு நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், பிஸ்கட் மற்றும் இதர பிரிவுகள் இரண்டிலும் உள்ள வலுவான உந்துதலால், அதன் 3வது காலாண்டு ஒருங்கிணைந்த நிகர லாபம் 17.14% உயர்ந்து ரூ.682.14 கோடியாக இருப்பதாக அறிவித்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.582.3 கோடி நிகர லாபத்தை ஈட்டியது. செயல்பாடுகளிலிருந்து அதன் வருவாய் நிதியாண்டின் 3வது காலாண்டில் 8.21% அதிகரித்து ரூ.4,969.82 கோடியாக உள்ளது.
நிறுவனத்தின் மொத்த செலவுகள் ரூ.4,107.59 கோடியாக இருந்தது. அதே வேளையில் அதன் மொத்த வருமானம், பிற வருமானம் உள்பட, 8 சதவீதம் உயர்ந்து ரூ.5,029.28 கோடியாக உள்ளது.
ஜிஎஸ்டி விகிதக் குறைப்புக்குப் பிறகு பிஸ்கட் துறை வணிகம், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 12% வளர்ச்சியடைந்தது.
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் ரூ.5,873.70 ஆக விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...