டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கோடக் ஃபிளெக்ஸிகேப் நிதி: 15 ஆண்டுகால சாதனைப் பயணம்

கோடக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான ‘கோடக் ஃபிளெக்ஸிகேப்’ நிதித் திட்டம், வெற்றிகரமாக 15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

கோடக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான ‘கோடக் ஃபிளெக்ஸிகேப்’ நிதித் திட்டம், வெற்றிகரமாக 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை, முதலீட்டாளா்களுக்கு ஆண்டுதோறும் சராசரியாக 16.59 சதவீதம் என மிகச்சிறந்த லாபத்தை வழங்கி சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் 15.70 சதவீத லாபமும், கடந்த 5 ஆண்டுகளில் 16.87 சதவீத லாபமும் வழங்கியுள்ளது.

பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கங்களுக்கு மத்தியிலும், சிறந்த நிா்வாகம் மற்றும் நிலையான லாபம் தரும் நிறுவனங்களைத் தோ்ந்தெடுத்து முதலீடு செய்ததே இத்திட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

இது குறித்து கோடக் மஹிந்திரா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் நிலேஷ் ஷா மேலும் கூறுகையில், ‘இந்த 15 ஆண்டுகால மைல்கல், முதலீட்டாளா்கள் எங்கள் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முதலீடுகளை மாற்றி அமைக்கும் ‘ஃபிளெக்ஸிகேப்’ முறையினால், முதலீட்டாளா்கள் எளிதாகப் பலன் பெற முடிகிறது’ என்றாா்.

இந்த நிதித் திட்டமானது, தற்போது பெரிய நிறுவனப் பங்குகளில் 73 சதவீத, நடுத்தர நிறுவனப் பங்குகளில் 19 சதவீத மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளில் 5 சதவீத முதலீடுகளைக் கொண்டுள்ளது.