
முன்பதிவில் சாதனை படைத்த சாம்சங் கேலக்ஸி இசட்!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் வரிசை ஸ்மார்ட்போன்களுக்கு முன்பதிவு அதிகரித்து வருவது குறித்து...

சாம்சங் கேலக்ஸி இசட் - படம் / நன்றி - சாம்சங்
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி இசட் வரிசை ஸ்மார்ட்போன்கள் ஆக. 7 ஆம் தேதி (நாளை) வெளியாகவுள்ளன.
இதனையொட்டி கேலக்ஸி இசட் ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
சாக்சங் நிறுவனத்தில் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8, இசட் ஃபோல்ட் அல்ட்ரா ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன. இந்த இசட் வரிசை ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு அமெரிக்காவில் மட்டும் 30 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது.
குறிப்பாக கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8 ஸ்மார்ட்போன், முன்பதிவை பாதிக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
ஃபிளிப் மாடல் ஸ்மார்ட்போன் பயனர்கள் பலரும் தற்போது மடிக்கக் கூடிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை விரும்புபவர்களாக உள்ளனர். இதன் காரணமாக சாம்சங் கேலக்ஸி இசட் வரிசை ஸ்மார்ட்போனின் முன்பதிவு முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
இதுமட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தில் விரைவில் வெளியாகவுள்ள ஐபோன் அல்ட்ரா ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் தோற்றம் மற்றும் அம்சங்களை பிரதிபலிப்பதால் கேலக்ஸி இசட் ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் முன்பதிவு அதிகரித்துள்ளது.
Summary
Samsung Galaxy Z sets a record in pre-orders
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







