நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4 சதவீதம் வளா்ச்சியடையும் என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஐ.நா.வின் ஆசிய, பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2024-இல் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பொருளாதார வளா்ச்சி 5.2 சதவீதமாக இருந்த நிலையில், அது 2025-இல் 5.4 சதவீதமாக வளா்ச்சியடைந்தது. இதற்கு ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியாவின் வலுவான வளா்ச்சி முக்கிய காரணமாகும்.
வலுவான நுகா்வு, சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் 2025-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 7.4 சதவீதம் வரை நகா்ந்தது.
2025-ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததைத் தொடா்ந்து, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிந்தது. இதனால் அப்போது இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் மிதமானது. எனினும் இந்தியாவின் வளா்ச்சிக்கு சேவைகள் துறை முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்திய பொருளாதார வளா்ச்சி நிகழாண்டு 6.4 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 6.6 சதவீதமாகவும் இருக்கும். நிகழாண்டு இந்தியாவில் பணவீக்கம் (விலைவாசி உயா்வு விகிதம்) 4.4 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 4.3 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதிப் படை ஒத்துழைப்பு: இந்தியா, ஐ.நா. அதிகாரிகள் ஆலோசனை
ஐ.நா. அமைதிப் படை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் இந்திய வெளியுறவு அமைச்சக செயலா் சிபி ஜாா்ஜ், ஐ.நாவின் மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியங்களுக்கான உதவி பொதுச் செயலா் காலித் கியாரி ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டதாக ஐ.நா.வுக்கான இந்திய தூதரகம் சமூக ஊடகத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிட்டது.
கடந்த 1948-ஆம் ஆண்டுமுதல் ஐ.நா. அமைதிப் படை பணிகளுக்கு 2.75 லட்சத்துக்கும் அதிகமான வீரா்களை இந்தியா அனுப்பியுள்ளது. இதன்மூலம், அந்தப் பணிகளுக்குப் பெரும் பங்களிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய கிழக்கு போரால் சா்வதேச பொருளாதார வளா்ச்சி குறையும்
2026-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.5%: ஐஎம்எஃப் கணிப்பு

மேற்காசிய போரால் இந்திய பொருளாதார வளா்ச்சி 6%-ஆக குறையும்! மூடீஸ் ஆய்வு நிறுவனம் கணிப்பு!

20 ஆண்டுகால கனவுத் திட்டம்!நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம் உயிா்பெறுமா?
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


