புதுதில்லி: கடந்த வாரம், பங்குச் சந்தையில் அதிக மதிப்புடைய முதல் 10 நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு ரூ. 64,734.46 கோடி சரிந்து முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் கடந்த வாரம் 263.67 புள்ளிகள் சரிந்த நிலையில் நிஃப்டி 106.5 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறவடைந்தன.
உலகளாவிய மற்றும் உள்நாட்டில் நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியிலும், பங்குச் சந்தையில் அதிகரித்த ஏற்ற இறக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், பங்குச் சந்தை தொடர்ந்து 6வது வாரமாக கிட்டத்தட்ட அரை சதவீதம் சரிந்து, சரிவுடன் நிறைவடைந்தன.
அரசியல் சார்ந்த கவலைகளும், கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்ததாலும், வாரத்தின் நடுப்பகுதியில் சந்தைகள் சற்று மீட்சியடைந்தன. இந்த மீட்சி ஏற்பட்ட போதிலும், உலகளாவிய பங்குச் சந்தைக் குறிப்புகளின் ஏற்ற இறக்கத்தை தொடர்ந்து, வெளியேறும் வெளிநாட்டு நிதி, ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு மற்றும் பணவீக்கம் குறித்த அச்சம் ஆகியவற்றின் காரணமாக சந்தையில் ஏற்ற-இறக்கங்களுடன் வர்த்தகமானது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 29,993.07 கோடி சரிந்து, ரூ. 10,20,420.26 கோடியாகவும், ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ. 12,845.81 கோடி சரிந்து, ரூ. 8,70,705.49 கோடியாகவும், பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 11,169.36 கோடி சரிந்து ரூ. 5,14,226.12 கோடியாக இருந்தது.
அதே வேளையில், எச்.டி.எஃப்.சி. வங்கியின் சந்தை மூலதனம் ரூ. 7,822.79 கோடி குறைந்து ரூ. 11,56,195.90 கோடியாகவும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் சந்தை மூலதனம் ரூ. 2,349.59 கோடி குறைந்து ரூ. 4,85,190.60 கோடியாகவும், பாரத ஸ்டேட் வங்கியின் சந்தை மூலதனம் ரூ. 553.84 கோடி குறைந்து ரூ. 9,41,015.31 கோடியாகவும் சுருங்கியது.
இதற்கு நேர்மாறாக, டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் சந்தை மதிப்பு ரூ. 22,359.78 கோடி உயர்ந்து ரூ. 8,87,028.43 கோடியாக இருந்ததது. இன்போசிஸ் சந்தை மூலதனம் ரூ. 12,374.76 கோடி உயர்ந்து ரூ. 5,27,409.43 கோடியாகவும், லார்சன் & டூப்ரோ சந்தை மூலதனம் ரூ. 6,575.43 கோடி அதிகரித்து ரூ. 4,97,111.62 கோடியாக அதிகரித்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பு ரூ. 3,518.45 கோடி அதிகரித்து ரூ. 18,28,034.07 கோடியாக உயர்ந்தது.
மதிப்புமிக்க நிறுவனத்திற்கான முதலிடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தக்கவைத்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து எச்.டி.எஃப்.சி. வங்கி, பார்தி ஏர்டெல், பாரத ஸ்டேட் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
Summary
The combined market valuation of six of the top-10 most valued firms declined by Rs 64,734.46 crore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்புமிக்க 8 நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 4.13 லட்சம் கோடியாக உயர்வு!

மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 1.75 லட்சம் கோடியாக சரிவு!

பங்குச் சந்தை உயர்வு எதிரொலி: முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 9.18 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



