மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

2030-31க்குள் 8,000 சேவை மையங்களை அமைக்க மாருதி சுசுகி இந்தியா இலக்கு!

2030-31 நிதியாண்டிற்குள் தனது சேவை வலையமைப்பை 8,000 மையங்களாக விரிவுபடுத்த மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் இலக்கு நிர்ணயித்துள்ளது.

News image

மாருதி - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 2:39 pm

புதுதில்லி: 2030-31 நிதியாண்டிற்குள் தனது சேவை வலையமைப்பை சுமார் 8,000 மையங்களாக விரிவுபடுத்த மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் இலக்கு நிர்ணயித்துள்ளதாக, அதன் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிசாஷி டேகுச்சி இன்று தெரிவித்தார்.

2025-26 நிதியாண்டில் நிறுவனம் 502 புதிய சேவை மையங்களை இணைந்துள்ளதாக மாருதி சுசுகி இந்தியா தெரிவித்தது.

எங்கள் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் பரவியிருப்பதாலும், அவர்களின் தேவைகள் தொடர்ந்து மாறிவருவதாலும், நாங்கள் தொடர்ந்து புதுமைகளைப் புகுத்தி, எங்கள் சேவை மையங்களை விரிவுபடுத்தி வருகிறோம்.

தற்போதிய நிலையில், எங்களிடம் 5,926 சேவை மையங்கள் உள்ளன. வரும் 2030-31 நிதியாண்டிற்குள் இந்த வலையமைப்பை சுமார் 8,000 மையங்களாக விரிவுபடுத்த நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம்.

வாடிக்கையாளர்கள் பணிமனைக்கு செல்லலாம் அல்லது வீட்டு வாசலிலேயே சேவை பெறும் வசதியை பயன்படுத்தலாம் அல்லது தாங்கள் அடிக்கடி செல்லும் இடங்களில் வாகனத்தைச் சீர்செய்து கொள்ளலாம் அல்லது நெடுந்தூரப் பயணங்களின் போது சேவைக்கான ஆதரவைப் பெறலாம் என்றார் ஹிசாஷி டேகுச்சி.

குஜராத்தில் அமையவுள்ள தனது புதிய உற்பத்தி ஆலையின் முதல் கட்டமாக, 2.5 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறனை உருவாக்க, ரூ. 10,189 கோடி முதலீடு செய்யப்போவதாக நிறுவனம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.

2030-31 நிதியாண்டிற்குள் ஆண்டுக்கு 40 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறனை எட்ட மாருதி இலக்கு நிர்ணயித்துள்ளது.

Summary

Maruti Suzuki India Ltd is aiming to scale up its service network to around 8,000 touchpoints by FY 2030-31.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.