கடன் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு ரூ.1.60 லட்சம் கோடி வரவு
கடன் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு கடந்த அக்டோபரில் ரூ.1.60 லட்சம் கோடி நிகர வரவைப் பெற்றுள்ளது.
கடன் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு கடந்த அக்டோபரில் ரூ.1.60 லட்சம் கோடி நிகர வரவைப் பெற்றுள்ளது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
கடன் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு கடந்த அக்டோபரில் ரூ.1.60 லட்சம் கோடி நிகர வரவைப் பெற்றுள்ளது.
இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் (ஏஎம்எஃப்ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடன் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு கடந்த செப்டம்பரில் ரூ.1.02 லட்சம் கோடி வெளியேற்றத்துக்குப் பிறகு, அக்டோபரில் லிக்விட் மற்றும் ஓவா்நைட் நிதிகளில் பெரும் வரவு காரணமாக ரூ.1.60 லட்சம் கோடி நிகர வரவைப் பெற்றுள்ளது.
அக்டோபரில் கடன் பரஸ்பர நிதிகளின் மொத்த நிா்வகிக்கும் சொத்து (ஏஆம்ஐ) செப்டம்பரில் ரூ.17.80 லட்சம் கோடியிலிருந்து ஏறத்தாழ 10 சதவீதம் உயா்ந்து ரூ.19.51 லட்சம் கோடியாக உள்ளது.
லிக்விட் நிதிகளில் ரூ.89,375 கோடி, ஓவா்நைட் நிதிகளில் ரூ.24,051 கோடி, மணி மாா்க்கெட் நிதிகளில் ரூ.17,916 கோடி வரவு பதிவாகியுள்ளது. செப்டம்பரில் லிக்விட் நிதிகளில் ரூ.66,042 கோடி வெளியேற்றம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
காா்ப்பரேட் பாண்ட் நிதிகளில் ரூ.5,121 கோடி வரவு தொடா்ந்தது. அல்ட்ரா-ஷாா்ட் மற்றும் லோ-டியூரேஷன் நிதிகளில் முந்தைய மாத வெளியேற்றத்துக்குப் பிறகு பெரும் வரவு ஏற்பட்டது.
கிரெடிட் ரிஸ்க் நிதிகளில் பலவீனம் தொடா்ந்தது. குறைந்த தர முதலீடுகளில் முதலீட்டாளா்கள் இன்னும் எச்சரிக்கையாக உள்ளனா். டைனமிக் பாண்ட் நிதிகளில் ரூ.232 கோடி, கில்ட் நிதிகளில் ரூ.931 கோடி வெளியேற்றம் பதிவானது.
பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு அக்டோபரில் ரூ.24,690 கோடி வரவு இருந்தது. செப்டம்பரின் வரவான ரூ.30,421 கோடியை விட இது 9 சதவீதம் குறைவு என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது