விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி எஸ் 26!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் 26 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் 26 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது
By இணையதளச் செய்திப் பிரிவு
Manivannan.S
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் 26 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.
இதன் விலை, சிறப்பம்சங்கள், வடிவமைப்பு, கேமரா திறன் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாம்சங் கேலக்ஸி எஸ் 25 ஸ்மார்ட்போனை விட கேலக்ஸி எஸ் 26, மேம்பாட்ட செயல்பாடு மற்றும் வடிவமைப்பு கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சாம்சங் நிறுவனம், ஆப்பிளுக்கு இணையான தயாரிப்புகளை வழங்கி வருகிறது. இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.
அந்தவகையில் இன்னும் ஒருசில மாதங்களில் கேலக்ஸி எஸ் 26 ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. கேலக்ஸி எஸ் 26, கேலக்ஸி எஸ் 26 பிளஸ், கேலக்ஸி எஸ் 26 அல்ட்ரா ஆகியவை அடுத்தடுத்து அறிமுகமாகவுள்ளன.
இவற்றின் வடிவம் மற்றும் செயல்பாடுகள் முந்தைய மாடலை விட மேம்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி எஸ் 26 சிறப்பம்சங்கள் (எதிர்பார்க்கப்படுபவை)
6.3 அங்குல அமோலிட் திரை கொண்டதாக இருக்கும். திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் உடையது. சாம்சங் நிறுவனம் திரைகளுக்கென பெயர்போன நிறுவனம். இதனைத் தக்கவைக்கும் முயற்சிகள் இதிலும் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி எஸ் 25 (7.2 மி.மீ.) ஸ்மார்ட்போனை விட கேலக்ஸி எஸ் 26 (6.9 மி.மீ.) மெல்லியதாக இருக்கும்.
தூசி, நீர்ப்புகாத்தன்மைக்காக IP68 திறன் கொண்டதாக இருக்கும்.
எக்ஸிநோஸ் 2600 சிப்செட் மற்றும் ஸ்நாப்டிராகன் புராசஸர் கொண்டது.
4300 mAh பேட்டரி திறன் மற்றும் 25W வேகமாக சார்ஜ் ஆகும் வகையிலான திறன் வழங்கப்படும்.
கேமராவை பொருத்தவரையில் பின்புறம் 50MP முதன்மை கேமரா கொடுக்கப்படும். 50MP அல்ட்ரா வைட் கேமராவும் கொடுக்கப்படும்.
கேலக்ஸி எஸ் 25-ல் 12MP அல்ட்ரா வைட் கேமரா மட்டுமே இருந்தது.
பிப்ரவரி 20 முதல் 28 வரையிலான ஏதேனும் ஒரு தேதியில் கேலக்ஸி எஸ் 26 வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy S26 Launch Date, Price In India
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது