ஹானர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விற்பனை யுக்தி பலரைக் கவர்ந்துள்ளது. அதாவது, 2 மீட்டர் தூரத்தில் இருந்து தவறினாலும் ஸ்மார்ட்போன் உடையாது என ஹானர் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
ஹானர் நிறுவனத்தின் எக்ஸ் 9 சி என்ற புதிய ஸ்மார்ட்போன், ஜூலை 12 - 14 தேதிகளில் வெளியாகும் என ஹானர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விளம்பரத்தை பிரபல இணைய விற்பனை தளமான அமேசானிலும் வெளியிட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பெரும்பாலும் விற்பனைக்கான யுக்தியாக, அதன் சிறப்பம்சங்களை முன்னிலைப்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில் ஹானர் எக்ஸ் 9 சி ஸ்மார்ட்போன், மற்ற ஸ்மார்ட்போன்களின் உறுதித்தன்மைக்கு சவால்விடும் வகையில் 2 மீட்டர் தூரத்தில் இருந்து தவறி விழுந்தாலும் உடையாது என்ற அம்சத்தை முன்னிலைப்படுத்தி வருகிறது.
சிறப்பம்சங்கள்
ஹானர் எக்ஸ் 9 சி ஸ்மார்ட்போனில், டிராப் டெக்னாலஜி 2.0 என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உறுதித் தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது. 2 மீட்டர் தூரத்தில் இருந்து விழுந்தாலும் உடைவதற்கான வாய்ப்பு 166% குறைவு என உறுதியளித்துள்ளது.
தட்டையான டைட்டானியம் உலோகத்தாலான புறவடிவமைப்பு உடையது
6600 mAh பேட்டரி திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 39% பேட்டரி திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
28.8 மணி நேரம் தொடர்ந்து விடியோக்களை பார்க்கலாம். 48.4 மணி நேரம் தொடர்ந்து பாடல்களை கேட்கலாம்.
திரையின் வெளிச்சம் கண்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் ஐ கம்ஃபோர்ட் டிஸ்பிளே அம்சத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 4000nits அம்சம் கொண்டது.
108MP ஐஓஎஸ் மோஷன் சென்சார் பொருத்தப்பட்ட கேமராக்கள் உடையது. இதனால், விடியோக்களை எந்தவித தடுமாற்றமுமின்றி பதிவு செய்ய முடியும்.
360 டிகிரியிலும் நீர்புகாத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
மேல் - கீழ்புறம் என இரண்டு ஸ்பீக்கர்கள் உடையது.
இதையும் படிக்க | உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள்! ஜூலை 8-ல் அறிமுகம்
Summary
The HONORX9c5G features SGS 5-Star Drop Resistance even up to 2 meters with tough design and global trust
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ஏஐ+ நோவா 2 ஸ்மார்ட்போன்! அடுத்த விற்பனை எப்போது?

அடித்தளம் ஆட்டம் காண்கிறது!

70 மீட்டர் தூரத்தில் இருந்து கோல் அடித்த ரியல் மாட்ரிட் வீரர்..! புஸ்கஸ் விருது கிடைக்குமா?

ஒருமுறை சார்ஜ் செய்தால் 2 நாள்கள் தாங்கும்! அறிமுகமானது போக்கோ சி85 எக்ஸ்!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


