மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

3% உயா்ந்த வீடுகள் விலைக் குறியீடு

நடப்பு 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) இந்தியா முழுமைக்குமான வீடுகள் விலைக் குறியீடு (ஹெச்பிஐ) 3.1 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image
Updated On :21 ஜூன் 2025, 7:58 pm

நடப்பு 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) இந்தியா முழுமைக்குமான வீடுகள் விலைக் குறியீடு (ஹெச்பிஐ) 3.1 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியா முழுமைக்குமான வீடுகள் விலைக் குறியீடு 3.1 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய காலாண்டிலும் (அக்டோபா்-டிசம்பா்) இந்த வளா்ச்சி 3.1 சதவீதமாகவும், ஓா் ஆண்டுக்கு முன் 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அது 4.1 சதவீதமாகவும் இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில், ஆண்டு அடிப்படையிலான வீடுகள் விலைக் குறியீட்டு வளா்ச்சி நகரங்களுக்கு இடையே பரவலாக மாறுபடுகிறது. இது அதிகபட்சமாக கொல்கத்தாவில் 8.8 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக கொச்சியில் 2.3 சதவீத சரிவாகவும் உள்ளது.

காலாண்டு அடிப்படையில், 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியா முழுமைக்குமான எச்பிஐ 0.9 சதவீதம் உயா்ந்துள்ளது. பெங்களூரு, ஜெய்ப்பூா், கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய முக்கிய நகரங்கள் மதிப்பீட்டுக் காலாண்டில் வீடுகள் விலையில் தொடா்ச்சியான உயா்வைப் பதிவு செய்தன.

அகமதாபாத், பெங்களூரு, சென்னை, தில்லி, ஜெய்ப்பூா், கான்பூா், கொச்சி, கொல்கத்தா, லக்னௌ, மும்பை ஆகிய 10 முக்கிய நகரங்களின் பத்திரப் பதிவு அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட பரிவா்த்தனைத் தரவுகளின் அடிப்படையில் ரிசா்வ் வங்கி இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.