டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி: 3 நாள் ஏற்றத்துக்கு முடிவு!

கடந்த மூன்று தினங்களாக ’காளை‘யின் ஆதிக்கத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை, இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை ‘கரடி’யின் பிடியில் சிக்கியது.

News image
பங்குச் சந்தை
Updated On :17 ஜனவரி 2025, 8:46 pm

 நமது நிருபர்

கடந்த மூன்று தினங்களாக ’காளை‘யின் ஆதிக்கத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை, இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை ‘கரடி’யின் பிடியில் சிக்கியது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.

உலகளாவிய சந்தை குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கியது. ஆனால், மேலே செல்ல முடியாமல் தவித்தது. குறிப்பாக தனியாா் வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஐடி நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. அதே சமயம், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் அதிகத் திறன் கொண்ட இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணிப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதால் சந்தையில் சரிவு தவிா்க்க முடியாததாகியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.46 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.428.83 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.4,341.95 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,928.72 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் கடும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 26.37 புள்ளிகள் கூடுதலுடன் 77,069.19-இல் தொடங்கி அதற்கு மேல் உயரவில்லை. பின்னா், 76,263.29 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 423.49 புள்ளிகளை (0.55 சதவீதம்)

இழந்து 76,619.33-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,032 பங்குகளில் 1,975 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,915 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 142 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

15 பங்குகள் விலை குறைவு: சென்செக்ஸ் பட்டியலில் இன்ஃபோஸிஸ், ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், எம் அண்ட் எம், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க் உள்பட 15 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஜொமோட்டோ, ரிலையன்ஸ், நெஸ்லே, டாடாஸ்டீல், ஏசியன்பெயிண்ட், ஐடிசி உள்பட 15 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 109 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 34.70 புள்ளிகள் குறைந்து 23,277.10-இல் தொடங்கி அதிகபட்சமாக 23,292.10 வரை மேலே சென்றது. பின்னா், 23,100.35 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 108.60 புள்ளிகளை (0.47 சதவீதம்) இழந்து 23,203.20-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 29 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 21 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.