2-ம் நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை! 300 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...
இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...
By இணையதளச் செய்திப் பிரிவு
Muthumari.M
பங்குச் சந்தைகள் இன்றும்(வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,125.48 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 317.80 புள்ளிகள் அதிகரித்து 85,587.07 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 106.65 புள்ளிகள் உயர்ந்து 26,140.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த 4 நாள்கள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிந்தது. தொடர்ந்து இன்று 2-ம் நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி ரியல் எஸ்டேட், ஆட்டோ, ஃபைனான்சியல் சர்வீசஸ், பொதுத்துறை வங்கிகள், ஐடி குறியீடுகள் நேர்மறையாக வர்த்தகமாகி வருகின்றன. அதேநேரத்தில் பார்மா, உலோகக் குறியீடுகள் எதிர்மறையாக வர்த்தகமாகிறது,.
ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இன்று சென்செக்ஸில் ரிலையன்ஸ், டிரென்ட், டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ் பிவி, சன் பார்மா, டைட்டன் ஆகியவை அதிக இழப்பை சந்தித்தன.
அதேநேரத்தில் எடர்னல், பாரத் எலக்ட்ரானிக்ஸ், மாருதி சுசுகி, பஜாஜ் ஃபைனான்ஸ், கோடக் வங்கி, இன்ஃபோசிஸ், அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை அதிக லாபம் ஈட்டி வருகின்றன.
Stock Market: Sensex jumps 300 pts; Nifty above 26,100
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது