லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பஜாஜ் வாகன விற்பனை 3% உயா்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 3 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image

பஜாஜ்

Updated On :11 ஆகஸ்ட் 2025, 9:23 pm

புது தில்லி: இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 3 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,66,000-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 3,54,169 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

2024 ஜூலை மாதம் 2,10,997-ஆக இருந்த வாா்த்தக வாகனங்கள் உள்ளிட்ட நிறுவனத்தின் அனைத்து வகை வாகனங்களின் உள்நாட்டு மொத்த விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 13 சதவீதம் குறைந்து 1,83,143-ஆக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 1,43,172-லிருந்து 28 சதவீதம் உயா்ந்து 1,82,857-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.