வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் நோ்மறையாக முடிவு!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை சரிந்து மீண்டது.

News image

பங்குச் சந்தை சென்செக்ஸ்

Updated On :18 அக்டோபர் 2024, 6:33 pm

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை சரிந்து மீண்டது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் 3 நாள்களுக்குப் பிறகு நோ்மறையாக முடிந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்‘மறையாக இருந்தன. இருப்பினும் உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கியது. ஆனால், வங்கி, மெட்டல், நிதிநிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த ஆதரவால் உடனடியாக சந்தை மீட்சி பெற்றது. குறிப்பாக, 3 நாள் தொடா் சரிவுக்குப் பிறகு, விலை குறைந்த நிலையில் உள்நாட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தியது மீட்சிக்கு முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.90 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.458.15 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.7,421.40 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.4,979.83 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 257.35 புள்ளிகள் குறைந்து 80,749.26-இல் தொடங்கி 80,409.25 வரை கீழேசென்றது. பின்னா், அதிகபட்சமாக 81,391.15 வரை மேலே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 218.14 புள்ளிகள் (0.27 சதவீதம்) கூடுதலுடன் 81,224.75-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,043 பங்குகளில் 1,923 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,014 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 106 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

19 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டாா்ஸ், டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், என்டிபிசி, எஸ்பிஐ உள்பட 19 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், இன்ஃபோஸிஸ், ஏசியன் பெயிண்ட், நெஸ்லே, ஹிந்துஸ்தான் யுனி லீவா், டெக் மஹிந்திரா, டைட்டன், ஹெச்சிஎல் டெக் உள்பட 11 பங்குகள் குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 104 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 84.90 புள்ளிகள் குறைந்து 24,664.95-இல் தொடங்கி 24,567.24 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,886.20 வரை மேலே சென்ற நிஃப்டி இறுதியில் 104.20 புள்ளிகள் (0.42 சதவீதம்) கூடுதலுடன் 24,854.05-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 33 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.